» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மெடிக்கல் ஷாப்பில் தீ விபத்து: வி.வி.டி சாலையில் போக்குவரத்து பாதிப்பு!
சனி 18, ஏப்ரல் 2026 11:29:49 AM (IST)

தூத்துக்குடி அண்ணாநகர் 8-வது தெருவில் உள்ள ஒரு மருந்தகத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினரின் உடனடி நடவடிக்கையால் தீ மற்ற கடைகளுக்குப் பரவாமல் தடுக்கப்பட்டது.
தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் இயங்கி வரும் மருந்தகம் ஒன்றில் இன்று காலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் உடனடியாகத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்தவுடன் மாவட்ட அலுவலர் கருணாகரன் தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் 2 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீணை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீ முழுமையாக அணைக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்களின் இந்தச் சமயோசித நடவடிக்கையினால், அருகில் இருந்த மற்ற வணிக நிறுவனங்களுக்குத் தீ பரவாமல் தடுக்கப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தத் தீ விபத்தின் போது ஏற்பட்ட புகைமூட்டம் மற்றும் தீயணைப்புப் பணிகளால், அண்ணாநகர் - வி.வி.டி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேர்தல் பறக்கும்படை சோதனையில் ரூ.1.30 கோடி பறிமுதல் - ரூ.87.14 லட்சம் விடுவிப்பு!
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 8:48:54 PM (IST)

தூத்துக்குடியில் தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரம்: ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 8:40:42 PM (IST)

கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைபர் படகு மாயம் : தூத்துக்குடியில் பரபரப்பு!
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 1:20:39 PM (IST)

பெண்களின் முன்னேற்றமே திராவிட மாடல் ஆட்சியின் இலக்கு : அமைச்சர் கீதாஜீவன் பிரச்சாரம்
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 1:14:31 PM (IST)

மண்ணுக்குள் புதைத்த 221 மதுபாட்டில்கள் பறிமுதல்: தாய், மகன் சிக்கினர்!
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 1:08:12 PM (IST)

மனைவி கோபித்து சென்றதால் வாலிபர் தற்கொலை!
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 1:02:54 PM (IST)





