» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் – ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 4:26:58 PM (IST)
தூத்துக்குடியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், 2026-ஆம் ஆண்டிற்கான கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம் வருகிற 17ஆம் தேதி துவங்குகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தூத்துக்குடி மாவட்டப் பிரிவு சார்பாக தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி மற்றும் கையுந்துப்பந்து (ஆண்கள் மற்றும் பெண்கள்) ஆகிய விளையாட்டுக்களில் 2026-ம் ஆண்டிற்கான "கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்" வரும் 17.04.2026 முதல் 01.05.2026 வரை காலை 6.00 மணி முதல் 8.00 மணி வரையும் மற்றும் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையும் என இருவேளைகளிலும் மாவட்ட விளையாட்டரங்கத்தில் வைத்து நடைபெற உள்ளது.
ஹாக்கி ஆண்களுக்கு மட்டும் கோவில்பட்டி செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது. இப்பயிற்சி முகாம் முற்றிலும் இலவசம். நுழைவு கட்டணம் இல்லை. இந்த பயிற்சி முகாமில் 18 வயதிற்குட்பட்ட அனைவரும் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சி முகாமில் பங்கேற்பதற்கு கீழ்க்காணும் முகவரியில் அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் நேரில் தொடர்பு கொண்டு தங்களது பெயரை பதிவு செய்து பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று பயன் பெறலாம்.
மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்,
மாவட்ட விளையாட்டரங்கம்,
ஜார்ஜ் ரோடு, தூத்துக்குடி,
போன் – 0461 2321149, செல் - 74017 03508.
இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைத்து வீரர் / வீராங்கனைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை - முதல்வர் விஜய்க்கு கோரிக்கை!
செவ்வாய் 19, மே 2026 3:16:18 PM (IST)

பூட்டிய வீட்டின் சாவியை எடுத்து 3 பவுன் நகை, ரூ.7,000 திருட்டு - மர்ம நபர்கள் கைவரிசை!
செவ்வாய் 19, மே 2026 12:44:14 PM (IST)

சுற்றுலா வேன் விபத்து கணவன் - மனைவி பலி : 13 பேர் படுகாயம்!
செவ்வாய் 19, மே 2026 12:33:28 PM (IST)

தூத்துக்குடியில் மே 22ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்
செவ்வாய் 19, மே 2026 12:13:17 PM (IST)

மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை!
செவ்வாய் 19, மே 2026 12:11:43 PM (IST)

ஓடும் ரயிலில் புகுந்து அடுத்தடுத்து 2 பேரிடம் நகை, செல்போன் பறிப்பு: 4 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!
செவ்வாய் 19, மே 2026 12:03:18 PM (IST)










