» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி சிவன் கோவில் திருவிழா: 8-ஆம் நாளில் குதிரை, கிளி வாகனங்களில் சுவாமி-அம்பாள் வீதி உலா!

செவ்வாய் 28, ஏப்ரல் 2026 9:23:16 PM (IST)



தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் சித்திரை பெருந்திருவிழாவின் எட்டாம் திருநாளான இன்று மாலை, சுவாமி குதிரை வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

திருவிழாவின் எட்டாம் நாளான இன்று விசேஷ வழிபாடுகள் நடைபெற்றன. மாலையில் அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் சங்கர ராமேஸ்வரரும், எழில் கொஞ்சும் கிளி வாகனத்தில் பாகம்பிரியாள் அம்பாளும் எழுந்தருளினர். மேள தாளங்கள் முழங்க, தீவட்டி மரியாதையுடன் சுவாமி - அம்பாள் நான்கு ரத வீதிகளிலும் பவனி வந்தனர்.

ரத வீதிகளில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள், தங்கள் வீடுகளுக்கு முன்பாக சுவாமிக்குத் தேங்காய் உடைத்து, தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். குறிப்பாகக் கிளி வாகனத்தில் எழுந்தருளிய அம்பாளைக் காணப் பெண் பக்தர்கள் அதிகளவில் திரண்டிருந்தனர். சித்திரை திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 30-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital




Thoothukudi Business Directory