» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அருகே உப்பாற்று ஓடையில் முதியவர் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 11:33:01 AM (IST)
தூத்துக்குடி அருகே உப்பாற்று ஓடையில் முதியவர் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை பைபாஸ் பாலத்தின் கீழே உள்ள உப்பாற்று ஓடையில், இன்று முதியவர் ஒருவரின் சடலம் சகதியில் சிக்கிய நிலையில் கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற புதுக்கோட்டை போலீசார், முதியவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த நபருக்கு சுமார் 75 வயது இருக்கும் எனத் தெரிகிறது. அவரது உடலில் காயங்கள் ஏதுமில்லை. தோற்றத்தைப் பார்க்கும்போது அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தெரிவதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? ஓடைக்குள் எப்படிச் சென்றார்? என்பது குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கை: பக்கிள் ஓடை அகலப்படுத்தும் பணிகளை ஆணையர் ஆய்வு
புதன் 29, ஏப்ரல் 2026 8:41:11 AM (IST)

குளத்தில் மண் அள்ளிய 3 பேர் கைது: பொக்லைன், டிப்பர் லாரி பறிமுதல்!
புதன் 29, ஏப்ரல் 2026 8:34:26 AM (IST)

பெண் வங்கி மேலாளரை நாற்காலியால் தாக்கிய ஆட்டோ ஓட்டுநர் கைது!
புதன் 29, ஏப்ரல் 2026 8:13:53 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவில் திருவிழா: 8-ஆம் நாளில் குதிரை, கிளி வாகனங்களில் சுவாமி-அம்பாள் வீதி உலா!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 9:23:16 PM (IST)

தூத்துக்குடி சிக்னல்களில் பசுமைப் பந்தல்: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 8:36:11 PM (IST)

பார்சல் சேவைக்கு குறைந்த கட்டணம்; கூடுதல் பாதுகாப்பு: பொதுமக்களுக்கு அஞ்சல் துறை அழைப்பு
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 3:52:48 PM (IST)








