» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி சிக்னல்களில் பசுமைப் பந்தல்: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 8:36:11 PM (IST)

தூத்துக்குடி மாநகரில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சிக்னல்களில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி மாநகராட்சி நிர்வாகம் அமைத்துள்ள 'பசுமைப் பந்தல்' பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள், முக்கிய சந்திப்புகளில் உள்ள சிக்னல்களில் காத்திருக்கும்போது கடும் வெப்பத்தால் அவதிப்பட்டு வந்தனர்.
இதனைக் கருத்தில் கொண்டு, சிக்னல்களில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி 'பசுமைப் பந்தல்' அமைக்க வேண்டும் என்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கத்தின் சார்பில் தூத்துக்குடி மாவட்டத் தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி ஆர். முருகன் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயர் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, மாநகரின் முக்கிய போக்குவரத்துச் சந்திப்புகளில் நிழல் தரும் வகையில் தற்காலிகப் பசுமைப் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் சந்திப்பு, பழைய மாநகராட்சி அலுவலகச் சந்திப்பு, அரசு மருத்துவமனை சந்திப்பு மற்றும் எட்டயபுரம் சாலை சந்திப்பு உள்ளிட்ட முக்கிய இடங்களின் நான்கு புறங்களிலும் இந்தப் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் சிக்னலுக்காகக் காத்திருக்கும் இடத்தில் உயரமாகப் பிணைக்கப்பட்டுள்ள இந்தப் பந்தல்கள், சூரிய வெப்பம் நேரடியாகத் தாக்காதவாறு நிழல் தருகின்றன.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், "வெயில் காலத்தில் சிக்னலில் 60 முதல் 90 விநாடிகள் காத்திருப்பது பெரும் சவாலாக இருந்தது. தற்போது அமைக்கப்பட்டுள்ள இந்தப் பசுமைப் பந்தல் மிகுந்த குளிர்ச்சியையும், நிழலையும் தருகிறது. மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த மனிதநேயமிக்கச் செயல் பாராட்டுக்குரியது" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கை: பக்கிள் ஓடை அகலப்படுத்தும் பணிகளை ஆணையர் ஆய்வு
புதன் 29, ஏப்ரல் 2026 8:41:11 AM (IST)

குளத்தில் மண் அள்ளிய 3 பேர் கைது: பொக்லைன், டிப்பர் லாரி பறிமுதல்!
புதன் 29, ஏப்ரல் 2026 8:34:26 AM (IST)

பெண் வங்கி மேலாளரை நாற்காலியால் தாக்கிய ஆட்டோ ஓட்டுநர் கைது!
புதன் 29, ஏப்ரல் 2026 8:13:53 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவில் திருவிழா: 8-ஆம் நாளில் குதிரை, கிளி வாகனங்களில் சுவாமி-அம்பாள் வீதி உலா!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 9:23:16 PM (IST)

பார்சல் சேவைக்கு குறைந்த கட்டணம்; கூடுதல் பாதுகாப்பு: பொதுமக்களுக்கு அஞ்சல் துறை அழைப்பு
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 3:52:48 PM (IST)

பெண்களைத் தொழில்முனைவோராக்கும் திட்டம் : தூத்துக்குடியில் 5 நாள் சிறப்புப் பயிற்சி முகாம்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 12:48:35 PM (IST)








