» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத் மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் மனமகிழ்ச்சி விழா

திங்கள் 13, ஏப்ரல் 2026 4:20:23 PM (IST)



நாசரேத் திருமறையூரில் உள்ள கனோன் தாமஸ் சித்தர் மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் மாணவர்களுக்கான மனமகிழ்ச்சி விழா நடைபெற்றது.

நாசரேத் பரி. யோவான் பேராலய வாலிப பெண்கள் ஐக்கிய சங்கத்தினர் சார்பில் திருமறையூர் கனோன் தாமஸ் சித்தர் மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில்  நடைபெற்ற மனமகிழ்ச்சி விழாவிற்கு பேராலய உதவி குருவானவர் தனசேகர் ராஜா தலைமை தாங்கினார். கனோன் தாமஸ் சித்தர் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளித் தாளாளர் டேவிட் சாலமோன் அனைவரையும் வரவேற்றார். 

நாசரேத் பரி. யோவான் பேராலய வாலிப பெண்கள் ஐக்கிய சங்கத்தினர் பாடல்கள் பாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினர். தொடர்ந்து மாணவர்களுக்கு பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தினர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். நிறைவாக பள்ளி முதல்வர் மெற்றில்டா ஜெசி நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory