» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அம்பேத்கர் பிறந்தநாள்: ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் உறுதிமொழி ஏற்பு!
திங்கள் 13, ஏப்ரல் 2026 3:23:13 PM (IST)
அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்திய அரசியலமைப்பின் தந்தை, சமூக சீர்திருத்தவாதி, சட்ட வல்லுநர் மற்றும் பொருளாதார நிபுணரான பி.ஆர். அம்பேத்கர் (ஏப்ரல் 14, 1891 - டிசம்பர் 6, 1956), ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் தீண்டாமை ஒழிப்புக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர். இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவராக இருந்து, உலகின் மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பை உருவாக்கிய இவருக்கு, 1990-ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது.
சாதிப் பாகுபாடற்ற சமத்துவ சமுதாயத்தைப் படைக்க பாடுபட்ட அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14-ஆம் தேதியை, தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் 'சமத்துவ நாள்' ஆகக் கொண்டாடி வருகிறது. இதையொட்டி, அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமத்துவ நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆட்சியர் விஷு மகாஜன் உறுதிமொழியை வாசிக்க, அலுவலர்கள் அதனைத் திரும்பக் கூறி ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் குருச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கல்யாணசுந்தரம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பென்னட் ஆசீர் மற்றும் பல்வேறு அரசுத் துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பூட்டிய வீட்டின் சாவியை எடுத்து 3 பவுன் நகை, ரூ.7,000 திருட்டு - மர்ம நபர்கள் கைவரிசை!
செவ்வாய் 19, மே 2026 12:44:14 PM (IST)

சுற்றுலா வேன் விபத்து கணவன் - மனைவி பலி : 13 பேர் படுகாயம்!
செவ்வாய் 19, மே 2026 12:33:28 PM (IST)

தூத்துக்குடியில் மே 22ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்
செவ்வாய் 19, மே 2026 12:13:17 PM (IST)

மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை!
செவ்வாய் 19, மே 2026 12:11:43 PM (IST)

ஓடும் ரயிலில் புகுந்து அடுத்தடுத்து 2 பேரிடம் நகை, செல்போன் பறிப்பு: 4 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!
செவ்வாய் 19, மே 2026 12:03:18 PM (IST)

குடியிருப்பு அருகே குவிக்கப்படும் குப்பைகள்! – நோய் பரவும் அபாயத்தால் பொதுமக்கள் பீதி!
செவ்வாய் 19, மே 2026 11:20:16 AM (IST)










