» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கல்வியும் மருத்துவமுமே எங்களது இலவசம் : நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஒபிலியா பிரசாரம்!

ஞாயிறு 12, ஏப்ரல் 2026 8:00:21 PM (IST)



"மக்களை இலவசங்களுக்காகக் கையேந்த விடமாட்டோம்; தரமான கல்வி மற்றும் மருத்துவத்தையே நாங்கள் இலவசமாக வழங்குவோம்" எனத் திருச்செந்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஒபிலியா பேசினார்.

திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் ஒபிலியா, கடந்த சில நாட்களாகத் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக நேற்று அம்மன்புரம் அருகே உள்ள கானம் பேரூராட்சிக்கு உட்பட்ட சோனகன்விளை, நீல்புறம், கூர்ந்தான்விளை, வள்ளிவிளை, வானுபன்விளை மற்றும் கானம் ஆகிய கிராமங்களில் அவர் பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசாரத்தின் போது ஒபிலியா பேசியதாவது: எங்களது அரசியல் அகராதியில் இலவசம் என்ற சொல்லுக்கே இடமில்லை. தரமான கல்வி, உலகத்தரம் வாய்ந்த மருத்துவம் மற்றும் சுத்தமான குடிநீர் - இவைதான் நாங்கள் மக்களுக்குக் கொடுக்கும் உண்மையான இலவசங்கள். மற்ற கட்சிகளைப் போல ஆயிரம், இரண்டாயிரம் தருகிறோம் என்று கூறி மக்களைக் கையேந்த விடமாட்டோம்."

விவசாயிகளுக்கும், உள்ளூர் பிரச்சினைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். விவசாயிகளின் தேவைகள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றப்படும். வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கப் புதிய தொழிற்சாலைகள் மற்றும் தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும். எனவே, மாற்றத்தை விரும்புவோர் அனைவரும் 'ஏர்க்கலப்பையுடன் கூடிய விவசாயி' சின்னத்தில் வாக்களித்துத் தன்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory