» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வடிவேலு பாணியில் எடப்பாடி பழனிசாமி காமெடி அரசியல் செய்கிறார்: கான்ஸ்டண்டன் ரவீந்திரன் எம்.பி.

ஞாயிறு 12, ஏப்ரல் 2026 9:21:14 AM (IST)



மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைச் செயல்படுத்த முடியாது என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, இப்போது தாமும் வழங்குவேன் என்று கூறுவது திரைப்பட நடிகர் வடிவேலுவின் 'நானும் ரவுடிதான்' என்ற நகைச்சுவை பாணியிலான அரசியலாக உள்ளது" என கான்ஸ்டண்டன் ரவீந்திரன் எம்.பி. விமர்சித்தார்.

தூத்துக்குடி திமுக வேட்பாளர் அமைச்சர் கீதா ஜீவனை ஆதரித்துப் பிரசாரம் செய்த கான்ஸ்டண்டன் ரவீந்திரன் எம்.பி., எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாக விமர்சித்தார். மகளிர் உரிமைத் தொகையை வழங்க முடியாது என்று முதலில் கூறிவிட்டு, இப்போது தாமும் வழங்குவேன் என எடப்பாடி பழனிசாமி கூறுவது, வடிவேலுவின் 'நானும் ரவுடிதான்' பாணியிலான காமெடி அரசியலாக உள்ளது. முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி கண்டுள்ளது என்றும், உரிமைத் தொகை ரூ.2,000-ஆக உயர்த்தப்படும் என்றும் உறுதியளித்தார்.

வைகோ முதல் விஜய் வரை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய கட்சிகள் வந்து போய்க்கொண்டே இருக்கும், ஆனால் திமுக என்பது தரம் வாய்ந்த நிரந்தரப் பேரியக்கம். துப்பாக்கிச் சூடு பாதித்தவர்களுக்கு அரசு வேலை வழங்கிய முதல்வர் ஸ்டாலினின் கரத்தை வலுப்படுத்த, அமைச்சர் கீதா ஜீவனை 75 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என மக்களிடம் கேட்டுக்கொண்டார். இந்தக் கூட்டத்தில் பகுதிச் செயலாளர் நிர்மல்ராஜ், துணை மேயர் ஜெனிட்டா, வட்டச் செயலாளர்கள் ரவிச்சந்திரன், அல்பட் லியோ ஜான்சன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory