» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திமுக ஆட்சி மக்களுக்கான நம்பகத்தன்மை கொண்ட ஆட்சி: மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 12, ஏப்ரல் 2026 1:33:51 PM (IST)

"திமுகவின் திராவிட மாடல் ஆட்சி எண்ணற்ற திட்டங்களை மக்களுக்கு அள்ளிக்கொடுத்துள்ளது; இது மக்களுக்கான நம்பகத்தன்மை கொண்ட ஆட்சி" என விளாத்திகுளம் தொகுதி திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பேசினார்.
விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட பனையூர், கல்லூரணி, வைப்பார், வேம்பார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டி மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு காலை உணவுத் திட்டம், மகளிர் விடியல் பேருந்து பயணம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் மற்றும் மகளிர் உரிமைத் தொகை எனப் புரட்சிகரமான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்களால் தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பமும் பயன்பெற்றுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டு காலத்தில், கிராமப்புறங்களில் உயர்தரத் தார்ச் சாலைகள் மற்றும் பேவர் பிளாக் சாலைகள் அமைத்தல், புதிய அங்கன்வாடி மையங்கள் மற்றும் நியாய விலைக் கடைகள் திறப்பு, பயணியர் நிழற்குடைகள், மேம்பாலங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டிகள் போன்ற அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்துள்ளதாகவும், மக்களின் அடிப்படைத் தேவைகளை அறிந்து பணியாற்றிய தமக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
தேர்தல் பிரசாரத்தில் திமுக மேற்கு ஒன்றியச் செயலாளர் அன்புராஜன், கிழக்கு ஒன்றியச் செயலாளர் மாரிமுத்து, இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜான் பிரிட்டோ மற்றும் கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கல்வியும் மருத்துவமுமே எங்களது இலவசம் : நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஒபிலியா பிரசாரம்!
ஞாயிறு 12, ஏப்ரல் 2026 8:00:21 PM (IST)

தவெக-வில் பெண்களுக்கு அங்கீகாரம் இல்லை : திமுக-வில் இணைந்த அஜிதா ஆக்னல் பேட்டி!
ஞாயிறு 12, ஏப்ரல் 2026 7:54:22 PM (IST)

தூத்துக்குடி மின்விளக்கு தூணில் விளம்பரப் பலகை : மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
ஞாயிறு 12, ஏப்ரல் 2026 7:50:33 PM (IST)

காட்டுப்பன்றிகளைக் கட்டுப்படுத்த துப்பாக்கி ஏந்திய வனக்காவலர்கள்: அதிமுக வேட்பாளர் அதிரடி வாக்குறுதி!
ஞாயிறு 12, ஏப்ரல் 2026 1:28:15 PM (IST)

வாக்கு சேகரிக்க வந்த ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ.வுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு: ஸ்ரீவைகுண்டத்தில் பரபரப்பு
ஞாயிறு 12, ஏப்ரல் 2026 1:25:02 PM (IST)

தூத்துக்குடியில் குடிபோதையில் மினிபஸ் இயக்கிய ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை: 2 பஸ்கள் பறிமுதல்!
ஞாயிறு 12, ஏப்ரல் 2026 9:28:03 AM (IST)








ஓட்டு போட்ட முட்டாள்Apr 12, 2026 - 07:08:45 PM | Posted IP 162.1*****