» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தவெக-வில் பெண்களுக்கு அங்கீகாரம் இல்லை : திமுக-வில் இணைந்த அஜிதா ஆக்னல் பேட்டி!

ஞாயிறு 12, ஏப்ரல் 2026 7:54:22 PM (IST)



தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட முக்கிய நிர்வாகியாக இருந்த அஜிதா ஆக்னல், அக்கட்சியிலிருந்து விலகி இன்று திமுகவில் இணைந்தார்.

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி கருணாநிதி முன்னிலையில், அஜிதா ஆக்னல் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அஜிதா ஆக்னல் கூறியதாவது: "நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்துள்ளேன். தமிழக வெற்றி கழகத்தில் பெண்களுக்கு உரிய அங்கீகாரமும், மதிப்பும் இல்லாத காரணத்தால் அந்த அமைப்பிலிருந்து விலகி, தற்போது திமுகவில் சேர்ந்துள்ளேன்" என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினர் கான்ஸ்டண்டன் ரவீந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் மார்க்கண்டேயன் (விளாத்திகுளம்), சண்முகையா (ஓட்டப்பிடாரம்), மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் உமரி சங்கர் மற்றும் ஜெகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தேர்தல் நேரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்டப் பொறுப்பாளராக இருந்தவர் விலகி திமுகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory