» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காட்டுப்பன்றிகளைக் கட்டுப்படுத்த துப்பாக்கி ஏந்திய வனக்காவலர்கள்: அதிமுக வேட்பாளர் அதிரடி வாக்குறுதி!

ஞாயிறு 12, ஏப்ரல் 2026 1:28:15 PM (IST)



விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சத்யா, இன்று தனது தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் வீதி வீதியாகச் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

வடக்கு முத்துலாபுரம், சுப்புலாபுரம், வீரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட சத்யா, அப்பகுதி விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கைகள் குறித்துப் பேசுகையில்: காட்டுப்பன்றித் தொல்லை: "கடந்த ஐந்தாண்டுகளாகக் காட்டுப்பன்றிகளால் மக்காச்சோளம், உளுந்து உள்ளிட்ட பயிர்கள் கடுமையாகச் சேதமடைந்து வருகின்றன. அதிமுக ஆட்சி அமைந்தவுடன், காட்டுப்பன்றிகளைக் கட்டுப்படுத்த வனத்துறை சார்பில் துப்பாக்கி ஏந்திய வனக்காவலர்கள் இப்பகுதிக்கு நியமிக்கப்படுவார்கள்."

வைப்பாறு - அச்சன்கோவில் நதிநீர் இணைப்புத் திட்டம் அதிமுக ஆட்சி வந்தவுடன் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தப்படும். இருக்கன்குடி நீர் தேக்கத்திலிருந்து நாகலாபுரம் வரை துண்டிக்கப்பட்டுள்ள கால்வாய் மீண்டும் சீரமைக்கப்பட்டு, விவசாயிகளுக்குத் தடையின்றித் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

பிரசாரத்தின் போது, புதூர் அதிமுக மேற்கு ஒன்றியச் செயலாளர் தனவதி, கிழக்கு ஒன்றியச் செயலாளர் தனஞ்செயன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டத் தலைவர் மோகன், கரிசல் பூமி வரதராஜன் மற்றும் பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory