» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாக்கு சேகரிக்க வந்த ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ.வுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு: ஸ்ரீவைகுண்டத்தில் பரபரப்பு

ஞாயிறு 12, ஏப்ரல் 2026 1:25:02 PM (IST)

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., ராமச்சந்திரா புரம் பகுதியில் வாக்கு சேகரிக்கச் சென்றபோது, அப்பகுதி மக்கள் திரண்டு அவருக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், பழைய காயல் ஊராட்சிக்கு உட்பட்ட ராமச்சந்திரா புரம் பகுதியில் இன்று தேர்தல் பிரசாரத்திற்காக ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. வருகை தந்தார். அவர் வாக்கு சேகரிக்க முயன்றபோது, அப்பகுதி மக்கள் அவரை வழிமறித்துத் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

தாமிரபரணி வெள்ளத்தின் போது தங்கள் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், எம்.எல்.ஏ. தங்களை நேரில் வந்து சந்திக்கவில்லை என்றும், எந்தவித உதவிகளையும் செய்யவில்லை என்றும், கடந்த முறை வெற்றி பெற்றுச் சென்ற பிறகு, தேவையான எந்தவொரு அடிப்படை வசதிகளையும் அல்லது நலத்திட்டங்களையும் அவர் செய்து தரவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டினர். 

"எங்கள் பகுதிக்கு எதுவுமே செய்யாத எம்.எல்.ஏ. இப்போது மட்டும் ஏன் வருகிறார்?" எனக் கேள்வி எழுப்பிய பொதுமக்கள், "எம்.எல்.ஏ.வே வெளியே போ" என முழக்கமிட்டனர். மக்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, வாக்கு சேகரிக்க முடியாமல் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. மற்றும் அவருடன் வந்த நிர்வாகிகள் அங்கிருந்து வெளியேறினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory