» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வீட்டிற்குள் புகுந்த 5 அடி நீளப் பாம்பு: தீயணைப்பு வீரர்கள் அதிரடி மீட்பு!
ஞாயிறு 29, மார்ச் 2026 3:04:44 PM (IST)

தூத்துக்குடி அருகே வீட்டிற்குள் புகுந்த 5 அடி நீளச் சாரைப்பாம்பைத் தீயணைப்புத் துறையினர் லாவகமாகப் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே நடுக்கூட்டுடன் காடு ஆறுமுகம் நகரைச் சேர்ந்தவர் வேலம்மாள். இவரது வீட்டிற்குள் நேற்று திடீரென 5 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று புகுந்து பதுங்கியிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர், உடனடியாக சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார்.
தகவல் கிடைத்ததும், சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் த. கார்த்திகேயன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வீட்டிற்குள் பதுங்கியிருந்த சுமார் 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை வீரர்கள் காயமின்றி உயிருடன் மீட்டனர். பின்னர் அந்தப் பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்பட்டது. இந்தத் துரித மீட்பு நடவடிக்கைக்காகப் பகுதி மக்கள் தீயணைப்பு வீரர்களுக்குப் பாராட்டு தெரிவித்தனர்.
கூட்டுடன் காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சமீபகாலமாகப் பாம்புகள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. இது குறித்து நிலைய அலுவலர் த. கார்த்திகேயன் பொதுமக்களுக்கு விடுத்த வேண்டுகோள்: "குடியிருப்புப் பகுதிகளில் பாம்புகள் வருவதைத் தவிர்க்க, பொதுமக்கள் தங்கள் வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் குப்பைகள் இன்றிச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். தேவையற்ற புதர்களை அகற்றுவது அவசியம் என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அகில இந்தியத் துறைமுகங்களுக்கு இடையிலான கைப்பந்து போட்டி: வ.உ.சி துறைமுகம் அணி சாதனை!
ஞாயிறு 29, மார்ச் 2026 8:26:57 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் ஸ்ரீநாத் போட்டி: தவெக வேட்பாளர்கள் பட்டியல் - விஜய் அறிவிப்பு!
ஞாயிறு 29, மார்ச் 2026 7:53:45 PM (IST)

பெட்டிக்கடையில் 14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: உரிமையாளர் கைது!
ஞாயிறு 29, மார்ச் 2026 7:40:13 PM (IST)

ஊரணியில் மூழ்கி 10-ஆம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு: தூத்துக்குடியில் சோகம்
ஞாயிறு 29, மார்ச் 2026 7:36:32 PM (IST)

திமுக கூட்டணியில் சீட் இல்லையேல் தனித்துப் போட்டி: சமத்துவ மக்கள் கழக செயற்குழுவில் தீர்மானம்!
ஞாயிறு 29, மார்ச் 2026 7:30:39 PM (IST)

தூத்துக்குடியில் பதுக்கிய 263 மது பாட்டில்கள், 20 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்!!
ஞாயிறு 29, மார்ச் 2026 3:24:57 PM (IST)







