» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பதுக்கிய 263 மது பாட்டில்கள், 20 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்!!

ஞாயிறு 29, மார்ச் 2026 3:24:57 PM (IST)

தூத்துக்குடியில் மதுவிலக்கு போலீசார் நடத்திய சோதனையில், ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபானங்கள் மற்றும் கடத்தல் ரேஷன் அரிசி மூட்டைகள் பிடிபட்டுள்ளன.

தேர்தல் விடுமுறை நாட்களில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காகவும், வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காகவும் மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகத் தூத்துக்குடி மதுவிலக்கு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், இன்ஸ்பெக்டர் ஜானகி தலைமையிலான போலீசார் தூத்துக்குடி கே.வி.கே. நகரில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை நடத்தினார்கள்.

போலீசார் நடத்திய சோதனையில் அந்த வீட்டில் பெட்டி பெட்டியாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 263 மதுபான பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டன. மேலும், அடுத்த அறையில் தலா 50 கிலோ எடை கொண்ட 20 மூடை ரேஷன் அரிசி (மொத்தம் 1,000 கிலோ) பதுக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், அந்த வீடு சுப்பிரமணியன் என்பவருக்குச் சொந்தமானது என்பதும், அவர் நெல்லையைச் சேர்ந்த ஒருவருக்கு வீட்டை வாடகைக்கு விட்டிருந்ததும் தெரியவந்தது. போலீசார் வருவதை அறிந்த அந்த நபர் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார். அவரைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட 263 மதுபான பாட்டில்கள் காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன. கைப்பற்றப்பட்ட 20 மூடை ரேஷன் அரிசி முறைப்படி உணவுப் பொருள் சேமிப்புக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. தேர்தல் நேரத்தில் மது மற்றும் ரேஷன் அரிசி ஒரே இடத்தில் பிடிபட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

கந்தன்Mar 29, 2026 - 05:08:26 PM | Posted IP 162.1*****

தூத்துக்குடி மாவட்ட கழுகுமலை பேரூராட்சி இண்டேன் gas ஏஜென்சியில் Lpg சிலிண்டர் பதிந்து பதிவு எண் விலை தொகை வந்த பிறகு ஏழுநாட்களுக்கு மேலாக TAC otp வரவில்லை வந்த பிறகெ வரவும் என திருப்பி அனுப்ப படுகிறார்கள். இது உணவு மாவட்ட வழங்கல் துறை கட்டுப்பாடே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory