» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தேர்தல் முடிந்தால்தான் யாருக்கு எவ்வளவு செல்வாக்கு என்பது தெரியும்: தூத்துக்குடியில் எடப்பாடி பழனிசாமி பேட்டி!
ஞாயிறு 29, மார்ச் 2026 3:19:18 PM (IST)

தேர்தல் முடிந்தால்தான் யாருக்கு எவ்வளவு செல்வாக்கு என்பது தெரியும்" என விஜய் குறித்து எடப்பாடி கே. பழனிசாமி கருத்து தெரிவித்தார்..
நெல்லை, குமரி, சங்கரன்கோவில் மற்றும் கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தடைந்தார்.
அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: "கடந்த 2023-ம் ஆண்டு தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்தும், தி.மு.க. அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் இதுபோன்ற எச்சரிக்கை வந்தவுடன் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆனால், தி.மு.க. அரசின் மெத்தனத்தால் தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்ட மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். நான் உடனடியாக வந்து மக்களைச் சந்தித்தேன், ஆனால் முதல்வர் ஸ்டாலின் வரவில்லை. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 5 நாட்கள் கழித்தே வந்தார்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது. தி.மு.க. கூட்டணியில் உள்ளவர்களே இதைக் குறிப்பிடுகிறார்கள். தூத்துக்குடியில் 12-ம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்டது இதற்கு ஒரு சான்று. தி.மு.க. ஆட்சியில் மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்.
த.வெ.க. தலைவர் விஜய் தனது வேட்பாளர் அறிமுகத்தின் போது 'தி.மு.க. vs த.வெ.க.' என இருமுனைப் போட்டி நிலவுவதாகக் கூறியது குறித்த கேள்விக்கு: அவர் சொன்னால் சொல்லிட்டுப் போறாரு... தேர்தல் முடிந்தால்தான் யாருக்கு எவ்வளவு செல்வாக்கு என்பது தெரியும்," என பதிலளித்தார்.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் மதிமுக இடையே பெரும் மனவருத்தம் நிலவுகிறது. 'அழுதுகொண்டே சிரிக்கிறேன்' என்று அவர்களின் நிர்வாகிகளே கூறுகிறார்கள். ஆனால், அ.தி.மு.க. கூட்டணியில் எந்தச் சிறு கடுகளவு பிரச்சினையும் இல்லை."
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேரடியாகப் பேசாமல் மற்றவர்கள் மூலம் முதலில் 10 தொகுதிகளும், பின் 5 தொகுதிகளும் கேட்டார். எங்களால் அவ்வளவு கொடுக்க இயலாது என்று கூறிவிட்டோம். கடந்த முறை 33 தொகுதிகளில் போட்டியிட்டு 33 ஆயிரம் வாக்குகளை மட்டுமே அவர் பெற்றுள்ளார்," என்று சாடினார்.
"காங்கிரஸ் மற்றும் தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதுதான் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது. அதனை மீட்டெடுக்க அ.தி.மு.க.தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து போராடி வருகிறது," என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அகில இந்தியத் துறைமுகங்களுக்கு இடையிலான கைப்பந்து போட்டி: வ.உ.சி துறைமுகம் அணி சாதனை!
ஞாயிறு 29, மார்ச் 2026 8:26:57 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் ஸ்ரீநாத் போட்டி: தவெக வேட்பாளர்கள் பட்டியல் - விஜய் அறிவிப்பு!
ஞாயிறு 29, மார்ச் 2026 7:53:45 PM (IST)

பெட்டிக்கடையில் 14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: உரிமையாளர் கைது!
ஞாயிறு 29, மார்ச் 2026 7:40:13 PM (IST)

ஊரணியில் மூழ்கி 10-ஆம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு: தூத்துக்குடியில் சோகம்
ஞாயிறு 29, மார்ச் 2026 7:36:32 PM (IST)

திமுக கூட்டணியில் சீட் இல்லையேல் தனித்துப் போட்டி: சமத்துவ மக்கள் கழக செயற்குழுவில் தீர்மானம்!
ஞாயிறு 29, மார்ச் 2026 7:30:39 PM (IST)

தூத்துக்குடியில் பதுக்கிய 263 மது பாட்டில்கள், 20 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்!!
ஞாயிறு 29, மார்ச் 2026 3:24:57 PM (IST)







