» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஊரணியில் மூழ்கி 10-ஆம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு: தூத்துக்குடியில் சோகம்
ஞாயிறு 29, மார்ச் 2026 7:36:32 PM (IST)

தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே பொட்டல்காடு கிராமத்தில், ஊரணிக்கு மீன்பிடிக்கச் சென்ற பள்ளி மாணவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி முத்தையாபுரம் பொட்டல்காடு கிராமம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகராஜ். இவரது மகன் அபிஷேக் (15). இவர் முத்தையாபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து, தற்போது பொதுத்தேர்வு வருகிறார். இன்று மதியம் அபிஷேக் தனது கிராமத்தில் உள்ள ஒரு ஊரணிக்கு மீன்பிடிப்பதற்காகச் சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கால்கள் ஊரணியில் இருந்த ஆழமான சகதியில் சிக்கிக்கொண்டன. அங்கிருந்து தப்பிக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. சிறிது நேரத்திலேயே அவர் சகதிக்குள் முழுமையாகச் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
இது குறித்துத் தகவல் அறிந்த தூத்துக்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மாணவனின் உடலை மீட்டனர். பின்னர், அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தத் துயரச் சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அகில இந்தியத் துறைமுகங்களுக்கு இடையிலான கைப்பந்து போட்டி: வ.உ.சி துறைமுகம் அணி சாதனை!
ஞாயிறு 29, மார்ச் 2026 8:26:57 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் ஸ்ரீநாத் போட்டி: தவெக வேட்பாளர்கள் பட்டியல் - விஜய் அறிவிப்பு!
ஞாயிறு 29, மார்ச் 2026 7:53:45 PM (IST)

பெட்டிக்கடையில் 14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: உரிமையாளர் கைது!
ஞாயிறு 29, மார்ச் 2026 7:40:13 PM (IST)

திமுக கூட்டணியில் சீட் இல்லையேல் தனித்துப் போட்டி: சமத்துவ மக்கள் கழக செயற்குழுவில் தீர்மானம்!
ஞாயிறு 29, மார்ச் 2026 7:30:39 PM (IST)

தூத்துக்குடியில் பதுக்கிய 263 மது பாட்டில்கள், 20 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்!!
ஞாயிறு 29, மார்ச் 2026 3:24:57 PM (IST)

தேர்தல் முடிந்தால்தான் யாருக்கு எவ்வளவு செல்வாக்கு என்பது தெரியும்: தூத்துக்குடியில் எடப்பாடி பழனிசாமி பேட்டி!
ஞாயிறு 29, மார்ச் 2026 3:19:18 PM (IST)







