» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல் - அண்ணன், தம்பி உள்பட 3 பேர் கைது!
ஞாயிறு 29, மார்ச் 2026 8:58:52 AM (IST)
குலசேகரன்பட்டினம் அருகே காதல் திருமணம் செய்து கணவர் வீட்டில் வசித்து வந்த இளம்பெண்ணைக் காரில் கடத்திச் சென்ற அவரது சகோதரர்கள் உள்ளிட்ட 3 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருகே ஆதியாக்குறிச்சியைச் சேர்ந்த செல்வா (27) என்பவரும், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவரும் காதலித்து கடந்த 15-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இது குறித்து ஏற்கனவே நடந்த போலீஸ் விசாரணையில், அந்தப் பெண் தனது விருப்பப்படியே கணவருடன் செல்வதாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அந்த இளம்பெண்ணின் வீட்டிற்குச் சென்ற அவரது இரண்டு சகோதரர்கள் மற்றும் உறவினர் ஒருவர், பெண்ணிடம் நைசாகப் பேசி அவரை வலுக்கட்டாயமாகக் காரில் ஏற்றி கடத்திச் சென்றனர். புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, நெல்லையில் இருந்த அந்தப் பெண்ணைப் பத்திரமாக மீட்டனர்.
கடத்தலில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர்கள் மற்றும் உறவினர் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட பெண் அவரது கணவரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அகில இந்தியத் துறைமுகங்களுக்கு இடையிலான கைப்பந்து போட்டி: வ.உ.சி துறைமுகம் அணி சாதனை!
ஞாயிறு 29, மார்ச் 2026 8:26:57 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் ஸ்ரீநாத் போட்டி: தவெக வேட்பாளர்கள் பட்டியல் - விஜய் அறிவிப்பு!
ஞாயிறு 29, மார்ச் 2026 7:53:45 PM (IST)

பெட்டிக்கடையில் 14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: உரிமையாளர் கைது!
ஞாயிறு 29, மார்ச் 2026 7:40:13 PM (IST)

ஊரணியில் மூழ்கி 10-ஆம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு: தூத்துக்குடியில் சோகம்
ஞாயிறு 29, மார்ச் 2026 7:36:32 PM (IST)

திமுக கூட்டணியில் சீட் இல்லையேல் தனித்துப் போட்டி: சமத்துவ மக்கள் கழக செயற்குழுவில் தீர்மானம்!
ஞாயிறு 29, மார்ச் 2026 7:30:39 PM (IST)

தூத்துக்குடியில் பதுக்கிய 263 மது பாட்டில்கள், 20 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்!!
ஞாயிறு 29, மார்ச் 2026 3:24:57 PM (IST)








காதல்Mar 29, 2026 - 06:41:30 PM | Posted IP 104.2*****