» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தேர்தல் நடத்தை விதிமுறை: தூத்துக்குடியில் ரூ.36.10 லட்சம் பணம்; ரூ.2.20 லட்சம் பொருட்கள் பறிமுதல்!

ஞாயிறு 22, மார்ச் 2026 8:08:06 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.36.10 லட்சம் ரொக்கம்,  ரூ.2,20,280  மதிப்புள்ள இலவசப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்

தமிழகச் சட்டமன்றப் பொதுத்தேர்தல் - 2026 நடைபெற உள்ளதை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, பன்னம்பாறை விளக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் பறக்கும் படை குழுவினர் இன்று தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். 

அந்த வழியாக வந்த கார், வேன் மற்றும் சரக்கு வாகனங்களை நிறுத்தி, உரிய ஆவணங்களின்றிப் பணம் அல்லது பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என அதிகாரிகள் விரிவான ஆய்வு மேற்கொண்டனர். இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் - தேர்தல் அலுவலர் இளம்பகவத் ஆய்வு செய்தார். 

அப்போது அவர், தமிழகச் சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனைகளில், இன்று (மார்ச் 22) வரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.36,09,880 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் 24 மணி நேரமும் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மொத்த ரொக்கத் தொகை: ரூ.36,09,880

கைப்பற்றப்பட்ட இலவசப் பொருட்களின் மதிப்பு: ரூ.2,20,280

பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களின் மதிப்பு: ரூ.20,432

ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட தொகை: ரூ.15,27,780
தேர்தல் நன்னடத்தை விதிகளை மதித்து, பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் உரிய ஆவணங்களின்றி அதிகப்படியான ரொக்கப் பணத்தைக் கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital







Thoothukudi Business Directory