» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மீன் வரத்து அதிகரிப்பு: விற்பனை அமோகம்; பொதுமக்கள் ஆர்வம்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:36:44 AM (IST)
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று மீன்களின் வரத்து அதிகமாக இருந்ததால் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. விடுமுறை மற்றும் ரமலான் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் போட்டி போட்டு மீன்களை வாங்கிச் சென்றனர்.
தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் இருந்து தினந்தோறும் ஏராளமான மீனவர்கள் நாட்டுப்படகுகளில் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அதிகாலையில் கரை திரும்பிய மீனவர்களுக்கு மீன்பாடு அமோகமாக இருந்தது. சீலா, பாறை, ஊழி உள்ளிட்ட பல வகை மீன்கள் அதிகளவில் கிடைத்ததால், மீனவர்கள் உற்சாகத்துடன் திரேஸ்புரம் ஏலக்கூடத்திற்கு மீன்களைக் கொண்டு வந்தனர்.
நேற்று விடுமுறை தினம் மற்றும் ரமலான் பண்டிகை என்பதால், அதிகாலை முதலே திரேஸ்புரம் துறைமுகத்தில் பொதுமக்களும், உள்ளூர் வியாபாரிகளும் அதிகளவில் குவிந்தனர். வழக்கமாகப் பண்டிகை காலங்களில் மீன்களின் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வரத்து அதிகமாக இருந்ததால் விலையில் பெரிய மாற்றம் ஏதுமின்றி மீன்கள் விற்பனை செய்யப்பட்டன.
மீன் விலை நிலவரம் (ஒரு கிலோ): சீலா மீன்: ரூ. 1,000 வரை, விளை மீன், ஊழி, பாறை: ரூ. 250 முதல் ரூ. 550 வரை, சூப்பர் நண்டு: ரூ. 900 வரை, கேரை, சூரை: ரூ. 200 வரை, மஞ்ச கிளி மீன்: ரூ. 150 வரை, சாளை மீன்: ரூ. 2,000 (ஒரு கூடை), வங்கனை மீன்: ரூ. 2,500 (ஒரு கூடை) விற்பனை செய்யப்பட்டன.
விதவிதமான மீன்கள் தாராளமாகக் கிடைத்ததால் பொதுமக்கள் தங்களுக்குப் பிடித்தமான மீன்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். மீன்களுக்குச் சரியான விலை கிடைத்ததால் மீனவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: பெண் பலி; சிறுமிகள் உட்பட 10 பேர் படுகாயம்!
ஞாயிறு 22, மார்ச் 2026 10:58:10 AM (IST)

மாணவி படுகொலை: கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆறுதல்
ஞாயிறு 22, மார்ச் 2026 10:24:56 AM (IST)

தூத்துக்குடியில் சர்வதேச மகளிர் தின கபடி போட்டி: துறைமுக ஆணையத் தலைவர் பரிசு வழங்கினார்
ஞாயிறு 22, மார்ச் 2026 9:43:42 AM (IST)

ஜாமீனில் வந்த வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை - போலீசார் விசாரணை!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:40:00 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.33.73 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ஆட்சியர் இளம்பகவத் தகவல்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:02:37 AM (IST)

பெண் ஊழியர்களுக்குப் பாலியல் தொந்தரவு : டோல்கேட் மேலாளர் கைது!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:00:14 AM (IST)








