» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஜாமீனில் வந்த வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை - போலீசார் விசாரணை!

ஞாயிறு 22, மார்ச் 2026 9:40:00 AM (IST)

கழுகுமலையில் குடிபோதை தகராறு வழக்கில் கைதாகி, ஜாமீனில் வெளியே வந்த வாலிபர் மனவேதனையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம்,கழுகுமலை சட்டநாதன் தெருவைச் சேர்ந்தவர் சின்னமாரியப்பன். இவரது மகன் செல்வக்குமார் (24), கூலித்தொழிலாளி. திருமணமாகாத இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டதாகக் கழுகுமலை போலீசாரால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையிலிருந்து சொந்த ஜாமீனில் வெளியே வந்த செல்வக்குமார், கடந்த ஒரு வாரமாக யாரிடமும் சரியாகப் பேசாமலும், வேலைக்குச் செல்லாமலும் இருந்துள்ளார். மேலும், அவர் மீண்டும் மது அருந்திவிட்டுப் பலரிடம் தகராறு செய்ததால், அவரது பெற்றோரும் உறவினர்களும் அவரைக் கண்டித்துள்ளனர்.இதனால் கடும் மனவேதனை அடைந்த செல்வக்குமார், நேற்று மாலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கழுகுமலை காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி, உதவி ஆய்வாளர் தமிழ்செல்வன் மற்றும் போலீசார், செல்வக்குமாரின் உடலைக் கைப்பற்றினர். பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக உடல் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்துக் கழுகுமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital






Thoothukudi Business Directory