» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.33.73 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ஆட்சியர் இளம்பகவத் தகவல்!

ஞாயிறு 22, மார்ச் 2026 9:02:37 AM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.33.73 லட்சம் ரொக்கப் பணத்தைப் பறக்கும் படையினர் இதுவரை பறிமுதல் செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன. விதிமீறல்களைத் தடுக்கவும், ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களைக் கைப்பற்றவும் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் 24 மணி நேரமும் தீவிரப் பணியில் ஈடுபட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட மொத்த ரொக்கம்: ரூ.33,73,380

கைப்பற்றப்பட்ட இலவசப் பொருட்கள்: ரூ.20,280 (மதிப்பு)

பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள்: ரூ.19,032 (மதிப்பு)

ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட தொகை: ரூ.11,42,100

நேற்று சனிக்கிழமை வரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் அடிப்படையில் இந்த புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தேர்தல் விதிமுறைகளின்படி, ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரொக்கப் பணம் கொண்டு செல்பவர்கள் அதற்கான உரிய ஆவணங்களைக் கையில் வைத்திருக்க வேண்டும். ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் அவை பறிமுதல் செய்யப்பட்டு, உரிய விசாரணக்குப் பின்னரே விடுவிக்கப்படும் எனத் தேர்தல் பிரிவு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital



Thoothukudi Business Directory