» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் சர்வதேச மகளிர் தின கபடி போட்டி: துறைமுக ஆணையத் தலைவர் பரிசு வழங்கினார்

ஞாயிறு 22, மார்ச் 2026 9:43:42 AM (IST)



தூத்துக்குடியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாவட்ட அளவிலான மகளிர் கபடி போட்டியில், தூத்துக்குடி அணி முதலிடம் பிடித்துக் கோப்பையைக் கைப்பற்றியது.

தூத்துக்குடி 'ஜேசிஐ பேர்ல் சிட்டி குயின் பீஸ்' மகளிர் அமைப்பு சார்பில், பெண்கள் மட்டுமே பங்கேற்ற கபடி போட்டி தூத்துக்குடி மாவட்ட உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டன.

குறிப்பாக கோவில்பட்டி மின்னல் கபடி அணி, தென்காசி பாரத் மாதா, கோவில்பட்டி ஸ்டெபி, தூத்துக்குடி டெஸ்டினி, காயல்பட்டினம் ரத்னா, தூத்துக்குடி காமராஜ் கல்லூரி, முத்தையாபுரம் பிரசன்னா, நேசக்கரங்கள் மற்றும் வியாசா கல்லூரி ஆகிய அணிகள் விறுவிறுப்பாக விளையாடின.

லீக் முறையில் நடைபெற்ற இந்தப் போட்டிகளின் இறுதியில் தூத்துக்குடி அணி முதலிடம், தென்காசி வியாசா கல்லூரி அணி இரண்டாமிடம், கோவில்பட்டி மின்னல் கபடி அணி மற்றும் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அணி மூன்றாமிடம் பிடித்தன. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மனத்தி கணேசன் தலைமை தாங்கினார். 

ஜேசிஐ பேர்ல் சிட்டி குயின் பீஸ் தலைவர் பாலசுபா ஷென் மற்றும் செயலாளர் சுருதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராகத் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்தகுமார் புரோகித் மற்றும் அவரது மனைவி ஷிபாலி புரோகித் ஆகியோர் கலந்துகொண்டு, வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்குப் பரிசுகளையும் சுழற்கோப்பைகளையும் வழங்கிப் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital






Thoothukudi Business Directory