» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண் ஊழியர்களுக்குப் பாலியல் தொந்தரவு : டோல்கேட் மேலாளர் கைது!

ஞாயிறு 22, மார்ச் 2026 9:00:14 AM (IST)

தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, அந்தச் சுங்கச்சாவடியின் மேலாளரைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புதூர் பாண்டியாபுரம் பகுதியில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இங்கு ரசீது வழங்குதல், தூய்மைப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஏராளமான பெண் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சுங்கச்சாவடியில் வடமாநிலத்தைச் சேர்ந்த அவதேஷ் சிங் என்பவர் மேலாளராகப் பணியாற்றி வந்தார்.

மேலாளர் அவதேஷ் சிங், அங்கு பணிபுரியும் பெண் ஊழியர்கள் சிலருக்கு வாட்ஸ்அப் மூலம் ஆபாசச் செய்திகளை அனுப்பியும், பல்வேறு வகைகளில் பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்தும் வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்கள், தூத்துக்குடி புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், மேலாளர் அவதேஷ் சிங் பெண் ஊழியர்களுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்தது உண்மை என்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், நேற்று அவரை அதிரடியாகக் கைது செய்தனர். பின்னர், தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 3-இல் ஆஜர்படுத்தப்பட்ட அவர், நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital



Thoothukudi Business Directory