» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் திடீர் கட்டண உயர்வு: லாரி உரிமையாளர்கள் சாலை மறியல்
சனி 21, மார்ச் 2026 5:02:35 PM (IST)

தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில், உள்ளூர் லாரிகளுக்குத் திடீரென கூடுதல் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து லாரி உரிமையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து சரக்குகளை ஏற்றிச் செல்லும் உள்ளூர் லாரிகளுக்கு, இந்தச் சுங்கச்சாவடியில் இதுவரை சலுகை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், நேற்று இரவு முதல் திடீரென ஒருமுறை சென்று வர ரூ. 585 என நிர்ணயித்து, இரண்டு முறைக்கு (Round Trip) ரூ. 1,270 வரை வசூலிக்கச் சுங்கச்சாவடி நிர்வாகம் உத்தரவிட்டது.
இந்தத் திடீர் கட்டண உயர்வால் அதிருப்தியடைந்த தூத்துக்குடி லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், சுங்கச்சாவடியை முற்றுகையிட்டுச் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் காரணமாகத் தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
விதிமுறைகளை மீறி இந்தச் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்குத் தேவையான எந்தவித அடிப்படை வசதிகளும் இங்கு இல்லை. ஊழியர்கள் பற்றாக்குறையினால் 5 நுழைவுப் பாதைகளில் 2 மட்டுமே செயல்படுகின்றன. இதனால் வழக்கமாகவே இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது என பல்வேறு புகார்களை தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, சுங்கச்சாவடி நிர்வாகத்தினருக்கும் லாரி உரிமையாளர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடக்கத்தில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இறுதியில் பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, லாரி உரிமையாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். அதன்பின் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு போக்குவரத்துச் சீரானது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: பெண் பலி; சிறுமிகள் உட்பட 10 பேர் படுகாயம்!
ஞாயிறு 22, மார்ச் 2026 10:58:10 AM (IST)

மாணவி படுகொலை: கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆறுதல்
ஞாயிறு 22, மார்ச் 2026 10:24:56 AM (IST)

தூத்துக்குடியில் சர்வதேச மகளிர் தின கபடி போட்டி: துறைமுக ஆணையத் தலைவர் பரிசு வழங்கினார்
ஞாயிறு 22, மார்ச் 2026 9:43:42 AM (IST)

ஜாமீனில் வந்த வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை - போலீசார் விசாரணை!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:40:00 AM (IST)

தூத்துக்குடியில் மீன் வரத்து அதிகரிப்பு: விற்பனை அமோகம்; பொதுமக்கள் ஆர்வம்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:36:44 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.33.73 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ஆட்சியர் இளம்பகவத் தகவல்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:02:37 AM (IST)








