» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெங்களூரு - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரம் மாற்றம்: பயணிகள் கோரிக்கை!
சனி 21, மார்ச் 2026 4:03:23 PM (IST)
பெங்களூரு - நாகர்கோவில் தினசரி எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையைத் தவிர்த்து பெங்களூருவிலிருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்குச் செல்லும் ரயில்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. தற்போது இயக்கப்படும் பெங்களூரு - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரமும் பயணிகளுக்கு வசதியாக இல்லை. இதனால் ஐடி துறையில் பணிபுரிவோர் மற்றும் மாணவர்கள் வார இறுதி நாட்களில் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்புவதில் கடும் சிரமம் ஏற்பட்டு வருவதோடு, வேலை நேரத்தையும் முழுமையாகப் பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது.
பெங்களூருவில் சர் எம். விஸ்வேஸ்வராயா முனையத்தில் (SMVB) இருந்து இந்த ரயில் இயக்கப்படுவதால், முனைய நெரிசல் சிக்கல்கள் இப்போது இல்லை. மேலும், மொத்தமுள்ள 662 கி.மீ தூரத்தில் சுமார் 300 கி.மீ தூரம் மின்மயமாக்கப்பட்ட இரட்டை ரயில் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் ரயில்கள் ஒன்றையொன்று கடந்து செல்வதற்கான காத்திருப்பு நேரம் குறைந்துள்ளதோடு, ரயிலின் வேகத்தை அதிகரிக்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நாகர்கோவிலில் இருந்து புறப்படும் ரயில் காலை 7:00 மணிக்குள் பெங்களூரு (SMVB) சென்றடைய வேண்டும். மறுமார்க்கமாக, பெங்களூருவிலிருந்து மாலை 6:00 மணிக்கு மேல் புறப்பட்டு நாகர்கோவில் வருமாறு நேரத்தை மாற்றியமைக்க வேண்டும். இந்த ரயிலை நாகர்கோவிலுடன் நிறுத்தாமல் கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்.
பயண நேரத்தைக் குறைத்து, வசதியான இரவு நேரப் பயணமாக மாற்ற ரயிலின் வேகத்தை அதிகரிக்க வேண்டும். இந்த மாற்றங்களை 2025 ஜூலை மாதம் வெளியாகவுள்ள புதிய ரயில் கால அட்டவணையில் (Time Table) சேர்க்க வேண்டும் எனப் பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ரயில்வே வாரியத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: பெண் பலி; சிறுமிகள் உட்பட 10 பேர் படுகாயம்!
ஞாயிறு 22, மார்ச் 2026 10:58:10 AM (IST)

மாணவி படுகொலை: கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆறுதல்
ஞாயிறு 22, மார்ச் 2026 10:24:56 AM (IST)

தூத்துக்குடியில் சர்வதேச மகளிர் தின கபடி போட்டி: துறைமுக ஆணையத் தலைவர் பரிசு வழங்கினார்
ஞாயிறு 22, மார்ச் 2026 9:43:42 AM (IST)

ஜாமீனில் வந்த வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை - போலீசார் விசாரணை!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:40:00 AM (IST)

தூத்துக்குடியில் மீன் வரத்து அதிகரிப்பு: விற்பனை அமோகம்; பொதுமக்கள் ஆர்வம்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:36:44 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.33.73 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ஆட்சியர் இளம்பகவத் தகவல்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:02:37 AM (IST)








