» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாணவி கொலை வழக்கில் கைதானவர் மதுரை சிறைக்கு மாற்றம்!

சனி 21, மார்ச் 2026 3:53:20 PM (IST)

விளாத்திகுளம் அருகே மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன், மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே நடைபெற்ற மாணவி கொலை வழக்கில் சாயல்குடியைச் சேர்ந்த முனியசாமி மகன் மாவீரன் (எ) தர்ம முனீஸ்வரன் (30) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டபோது அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக, எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சைக்குப் பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் தர்ம முனீஸ்வரன் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா, அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிட்டார். மேலும், வருகிற ஏப்ரல் 2-ம் தேதி அவரை மீண்டும் ஆஜர்படுத்த ஆணையிட்டார். இதனைத் தொடர்ந்து அவர் முதலில் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டதாக தெரிகிறது. பாதுகாப்பு சூழல் மற்றும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு, சிறைத்துறை நிர்வாகம் அவரை இடமாற்றம் செய்ய முடிவு செய்தது. இதன் அடிப்படையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தர்ம முனீஸ்வரன் இரவோடு இரவாக மதுரை மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு அடைக்கப்பட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital






Thoothukudi Business Directory