» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மேன்ஷனில் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை: தூத்துக்குடியில் பரபரப்பு
சனி 21, மார்ச் 2026 3:30:01 PM (IST)
தூத்துக்குடியில் மேன்ஷனில் 5 அறைகளின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி டூவிபுரம் 3-வது தெருவில் தனியார் மேன்ஷன் ஒன்று இயங்கி வருகிறது. இதில் தனியார் நிறுவன ஊழியர்கள் 10-க்கும் மேற்பட்டோர் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் காலையில் வேலைக்குச் சென்றுவிட்டு, மாலையில் அறைக்குத் திரும்புவது வழக்கம்.
நேற்று காலையில் வழக்கம்போல் அங்கிருந்தவர்கள் அறைகளைப் பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றனர். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், அடுத்தடுத்து 5 அறைகளின் பூட்டுகளை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். இவ்வாறு 5 அறைகளிலும் இருந்த பணம், லேப்டாப், பவர் பேங்க் உள்ளிட்ட சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்துத் தகவலறிந்த மத்தியபாகம் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் மேன்ஷனில் நடந்த இந்தத் துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: பெண் பலி; சிறுமிகள் உட்பட 10 பேர் படுகாயம்!
ஞாயிறு 22, மார்ச் 2026 10:58:10 AM (IST)

மாணவி படுகொலை: கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆறுதல்
ஞாயிறு 22, மார்ச் 2026 10:24:56 AM (IST)

தூத்துக்குடியில் சர்வதேச மகளிர் தின கபடி போட்டி: துறைமுக ஆணையத் தலைவர் பரிசு வழங்கினார்
ஞாயிறு 22, மார்ச் 2026 9:43:42 AM (IST)

ஜாமீனில் வந்த வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை - போலீசார் விசாரணை!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:40:00 AM (IST)

தூத்துக்குடியில் மீன் வரத்து அதிகரிப்பு: விற்பனை அமோகம்; பொதுமக்கள் ஆர்வம்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:36:44 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.33.73 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ஆட்சியர் இளம்பகவத் தகவல்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:02:37 AM (IST)








