» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழக சட்டமன்ற தேர்தல்: தூத்துக்குடி தவெக உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு?
சனி 21, மார்ச் 2026 10:49:41 AM (IST)

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான தமிழக வெற்றிக் கழகத்தின் உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜய்யின் நெருங்கிய நண்பரும், நகைச்சுவை நடிகருமான ஸ்ரீநாத் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. முன்னதாக, இத்தொகுதியில் அஜிதா ஆக்னல் மற்றும் எஸ்டிஆர் சாமுவேல் ராஜா ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருந்த நிலையில், தற்போது ஸ்ரீநாத் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன.
இதுபோல் திருச்செந்தூரில் ஜேகேஆர் முருகன் முருகன், ஸ்ரீவைகுண்டத்தில் அன்னை சரவணன், ஓட்டப்பிடாரத்தில் மதன்ராஜ், விளாத்திகுளத்தில் மகேஷ்வர் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது அதிகாரப்பூர்வமான பட்டியல் அல்ல என்பதும், கட்சித் தலைமை விரைவில் இது குறித்த முறையான அறிவிப்பை வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: பெண் பலி; சிறுமிகள் உட்பட 10 பேர் படுகாயம்!
ஞாயிறு 22, மார்ச் 2026 10:58:10 AM (IST)

மாணவி படுகொலை: கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆறுதல்
ஞாயிறு 22, மார்ச் 2026 10:24:56 AM (IST)

தூத்துக்குடியில் சர்வதேச மகளிர் தின கபடி போட்டி: துறைமுக ஆணையத் தலைவர் பரிசு வழங்கினார்
ஞாயிறு 22, மார்ச் 2026 9:43:42 AM (IST)

ஜாமீனில் வந்த வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை - போலீசார் விசாரணை!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:40:00 AM (IST)

தூத்துக்குடியில் மீன் வரத்து அதிகரிப்பு: விற்பனை அமோகம்; பொதுமக்கள் ஆர்வம்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:36:44 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.33.73 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ஆட்சியர் இளம்பகவத் தகவல்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:02:37 AM (IST)








