» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் 'தேடல்' புத்தகத் திறனாய்வு விழா

சனி 21, மார்ச் 2026 10:39:09 AM (IST)



கோவில்பட்டியில் 'இலக்கியச் சாரல்' மற்றும் 'சகாராவைத் தாண்டாத ஒட்டகம்' கல்வி நிறுவனம் சார்பில், எழுத்தாளர் இராஜேஷ் சங்கரப்பிள்ளை எழுதிய 'தேடல்' புத்தகத்தின் திறனாய்வு விழா நடைபெற்றது.

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள தியான பயிற்சி அரங்கில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, நல்லாசிரியர் ப. ஜான் கணேஷ் தலைமை தாங்கினார். விஸ்வாஸ் கல்வி அறக்கட்டளை நிறுவனர் 'ஞான ஒளிமலர்' இந்திராணி அம்மா மற்றும் எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி முதல்வர் முனைவர் ஆர். செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில்பட்டி இசை எப்.எம். இயக்குநர் மற்றும் மேனாள் வேளாண் கல்வி ஆசிரியர் கோ. சுரேஷ்குமார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

விழாவில் 'தேடல்' நூலினைப் பற்றிப் இலக்கிய ஆளுமைகள் முனைவர் முருக சரஸ்வதி, இராதா (தமிழாசிரியர்), முனைவர் கி. பிரபு (முதல்வர்), நல்லாசிரியர் ராஜசேகர் (தமிழாசிரியர்), கவிஞர் ஜெ. பார்த்திபன் ஆகியோர் விரிவான திறனாய்வு உரைகளை வழங்கினர். நிகழ்ச்சியின் நிறைவாக, நூலாசிரியர் இராஜேஷ் சங்கரப்பிள்ளை ஏற்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து வரகவி நல்லாசிரியர் மா. முருகேசன் நன்றியுரை வழங்கினார்.

இவ்விழாவில் கழுகு மலை திருவள்ளுவர் கழகத் தலைவர் பொன்ராஜ் பாண்டியன், செயலாளர் முருகன், கோவில்பட்டி கம்பன் கழகச் செயலாளர் சரவணச் செல்வன், தலைவர் முத்துப்பாண்டியன், சிறார் கலை இலக்கிய சங்க செயலாளர் மணிமொழி நங்கை, பொருளாளர் கண்ணகி, கவிஞர் போத்திராஜ், எழுத்தாளர் இராஜலட்சுமி, திருவள்ளுவர் மன்றத் துணைத் தலைவர் திருமலை முத்துச்சாமி உட்பட இலக்கிய ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital






Thoothukudi Business Directory