» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மீன் கழிவு நிறுவனங்களை மூடாவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு : பொட்டலூரணி கிராம மக்கள் முடிவு
சனி 21, மார்ச் 2026 8:58:18 AM (IST)
தூத்துக்குடி அருகே பொட்டலூரணி பகுதியில் செயல்பட்டு வரும் மீன் கழிவு நிறுவனங்களை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர்.
பொட்டலூரணி கிராம மக்கள் தங்கள் பகுதியில் உள்ள மூன்று மீன் கழிவு நிறுவனங்களால் ஏற்படும் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டி, அவற்றை நிரந்தரமாக மூடக் கோரித் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக நடைபெற்ற ஊர்க் கூட்டத்தில், கீழ்க்கண்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தித் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது:
கிராமப் பகுதியில் உள்ள 3 மீன் கழிவு நிறுவனங்களையும் உடனடியாகவும், நிரந்தரமாகவும் மூட வேண்டும். போராட்டத்தின் போது பொதுமக்கள் மீது பதியப்பட்ட அனைத்துப் பொய் வழக்குகளையும் அரசு திரும்பப் பெற வேண்டும். தூத்துக்குடி - நெல்லை வழித்தடத்தில் இயக்கப்படும் இடைநில்லாப் பேருந்துகளின் எண்ணிக்கையைக் குறைத்து, சாதாரணப் பேருந்துகளை அதிகப்படுத்த வேண்டும்.
குறிப்பாக இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை அனைத்துப் பேருந்துகளும் பொட்டலூரணி விலக்கில் நின்று செல்ல வேண்டும். மின்விளக்கு வசதி: காட்டுப் பகுதியில் உள்ள பொட்டலூரணி விலக்கு பேருந்து நிறுத்தத்தில் இரண்டு உயர்கோபுர மின்விளக்குகளை அமைக்க வேண்டும். எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சியிலிருந்து பொட்டலூரணி கிராமத்தைப் பிரித்து, தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும்.
தேர்தல் புறக்கணிப்பு குறித்த இந்த முடிவை மாநில ஆளுநர், தலைமைச் செயலாளர், தமிழகத் தலைமைத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட 22 முக்கிய அதிகாரிகளுக்குத் தபால் மூலம் மனுவாக அனுப்பியுள்ளனர். இந்தத் தகவலைப் பொட்டலூரணி மீன் கழிவு நிறுவனங்களுக்கு எதிரான போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சங்கரநாராயணன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: பெண் பலி; சிறுமிகள் உட்பட 10 பேர் படுகாயம்!
ஞாயிறு 22, மார்ச் 2026 10:58:10 AM (IST)

மாணவி படுகொலை: கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆறுதல்
ஞாயிறு 22, மார்ச் 2026 10:24:56 AM (IST)

தூத்துக்குடியில் சர்வதேச மகளிர் தின கபடி போட்டி: துறைமுக ஆணையத் தலைவர் பரிசு வழங்கினார்
ஞாயிறு 22, மார்ச் 2026 9:43:42 AM (IST)

ஜாமீனில் வந்த வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை - போலீசார் விசாரணை!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:40:00 AM (IST)

தூத்துக்குடியில் மீன் வரத்து அதிகரிப்பு: விற்பனை அமோகம்; பொதுமக்கள் ஆர்வம்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:36:44 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.33.73 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ஆட்சியர் இளம்பகவத் தகவல்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:02:37 AM (IST)








