» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

படுகொலை செய்யப்பட்ட மாணவியின் உடலுக்கு அமைச்சர் கீதா ஜீவன் அஞ்சலி!

வெள்ளி 20, மார்ச் 2026 4:38:35 PM (IST)



விளாத்திகுளம் அருகே படுகொலை செய்யப்பட்ட மாணவியின் உடலுக்கு அமைச்சர் கீதா ஜீவன் அஞ்சலி செலுத்தினார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில், கடந்த வாரம் படுகொலை செய்யப்பட்ட பிளஸ்-2 மாணவியின் உடலுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கீதா ஜீவன் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்கண்டேயன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி கடந்த வாரம் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், நேற்று குற்றவாளியைக் கண்டுபிடித்துக் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, இன்று மாணவியின் இல்லத்திற்குச் சென்ற மக்கள் பிரதிநிதிகள், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

இந்த அஞ்சலி நிகழ்வின் போது தூத்துக்குடி மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளரும் மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளருமான பெருமாள், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன் மற்றும் விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர்களான சின்னமாரிமுத்து (கிழக்கு), ராமசுப்பு (மத்திய), அன்புராஜன் (மேற்கு), இமானுவேல் (தெற்கு) உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital





Thoothukudi Business Directory