» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மாணவி கொலை வழக்கில் கைதானவருக்கு உச்சபட்ச தண்டனை உறுதி! - கனிமொழி எம்.பி கருத்து!
வெள்ளி 20, மார்ச் 2026 12:00:00 PM (IST)
விளாத்திகுளம் பள்ளி மாணவி கொலை வழக்கில் தொடர்புடைய சமூக விரோதிக்குச் சட்டப்படி உச்சபட்ச தண்டனை கிடைப்பது உறுதி செய்யப்படும் எனத் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் துரிதமாகச் செயல்பட்டு, குற்றவாளியைக் கைது செய்த தமிழ்நாடு காவல்துறையின் நடவடிக்கையைத் தனது 'எக்ஸ்' (X) சமூக வலைதளப் பக்கத்தில் கனிமொழி பாராட்டியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: "இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட சமூக விரோதிக்கு மிகக் கடுமையான உச்சபட்ச தண்டனை கிடைப்பதை அரசு உறுதி செய்யும். பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்கவும், அவர்கள் இந்தத் துயரிலிருந்து மீண்டு வரவும் எப்போதும் துணையாக இருப்போம்.
குற்றவாளிகளைத் தண்டிப்பதைச் சட்டம் பார்த்துக் கொள்ளும். ஆனால், குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பான சூழலை ஒரு சமூகமாக நாம் அனைவரும் ஒன்றிணைந்துதான் உறுதிப்படுத்த முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
ஆமாப்பா போதும்பாMar 20, 2026 - 05:17:17 PM | Posted IP 172.7*****
யப்பா போதும்பா. நாடகம் எல்லாம் வேண்டாம்பா. அதற்கு முன்னாடி இதையும் ஒங்க தலைவன் ஏற்கனவே ஆட்சிக்கு வந்தவுடன் சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலை , ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு, படுகொலைக்கு நீதி வாங்கித் தரப்படும் என்று கூறி உதார் விட்டாச்சு.. போங்கப்பா தெலுங்கு சின்ன மேளம் நாடக குடும்பம்.
உண்மMar 20, 2026 - 05:12:11 PM | Posted IP 104.2*****
இது வாய் திறந்தாலே பொய் எல்லாம் வரும் ஆனால் உண்மை எல்லாம் வராது.
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: பெண் பலி; சிறுமிகள் உட்பட 10 பேர் படுகாயம்!
ஞாயிறு 22, மார்ச் 2026 10:58:10 AM (IST)

மாணவி படுகொலை: கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆறுதல்
ஞாயிறு 22, மார்ச் 2026 10:24:56 AM (IST)

தூத்துக்குடியில் சர்வதேச மகளிர் தின கபடி போட்டி: துறைமுக ஆணையத் தலைவர் பரிசு வழங்கினார்
ஞாயிறு 22, மார்ச் 2026 9:43:42 AM (IST)

ஜாமீனில் வந்த வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை - போலீசார் விசாரணை!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:40:00 AM (IST)

தூத்துக்குடியில் மீன் வரத்து அதிகரிப்பு: விற்பனை அமோகம்; பொதுமக்கள் ஆர்வம்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:36:44 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.33.73 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ஆட்சியர் இளம்பகவத் தகவல்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:02:37 AM (IST)









BabuMar 21, 2026 - 08:04:34 AM | Posted IP 104.2*****