» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விளாத்திகுளம் தொகுதி திமுக வேட்பாளர் தேர்வு: முதல்வர் ஸ்டாலின் நேர்காணல்!
வெள்ளி 20, மார்ச் 2026 11:30:00 AM (IST)

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, விளாத்திகுளம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார்.
தமிழகத்தின் 17-வது சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு, முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் பங்கேற்று நேர்காணலை நடத்தினர்.
விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் களம் இறங்க மொத்தம் 7 பேர் விருப்ப மனு அளித்திருந்தனர். இவர்களில் தற்போதைய எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், வசந்தம் ஜெயக்குமார் (மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளர் மற்றும் பாளையங்கோட்டை தொகுதி தேர்தல் பார்வையாளர்), மகேந்திரன் (மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்), சென்றாய பெருமாள் (மாவட்டப் பொறியாளர் அணி அமைப்பாளர்), ரவி (புதூர் ஒன்றிய துணைச்செயலாளர்) அக்ரி பாலமுருகன் ஆகியோரிடம் நேர்காணல் நடைபெற்றது.
விளாத்திகுளம் தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் மற்றும் வசந்தம் ஜெயக்குமார் இடையே பலத்த போட்டி நிலவி வரும் நிலையில், கட்சியின் தலைமை யாரைத் தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்புத் தொண்டர்களிடையே அதிகரித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: பெண் பலி; சிறுமிகள் உட்பட 10 பேர் படுகாயம்!
ஞாயிறு 22, மார்ச் 2026 10:58:10 AM (IST)

மாணவி படுகொலை: கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆறுதல்
ஞாயிறு 22, மார்ச் 2026 10:24:56 AM (IST)

தூத்துக்குடியில் சர்வதேச மகளிர் தின கபடி போட்டி: துறைமுக ஆணையத் தலைவர் பரிசு வழங்கினார்
ஞாயிறு 22, மார்ச் 2026 9:43:42 AM (IST)

ஜாமீனில் வந்த வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை - போலீசார் விசாரணை!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:40:00 AM (IST)

தூத்துக்குடியில் மீன் வரத்து அதிகரிப்பு: விற்பனை அமோகம்; பொதுமக்கள் ஆர்வம்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:36:44 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.33.73 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ஆட்சியர் இளம்பகவத் தகவல்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:02:37 AM (IST)








