» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணியா? - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி விளக்கம்!
வெள்ளி 20, மார்ச் 2026 10:58:25 AM (IST)

என்.ஆர். காங்கிரஸ் கட்சி தற்போது வரை பா.ஜ.க. கூட்டணியில் தான் நீடிக்கிறது என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி விளக்கம் அளித்துள்ளார்.
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி குறித்துப் பரவி வந்த வதந்திகளுக்குப் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, நேற்று இரவு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார். கோவிலின் பிரகாரத்தில் உள்ள தூண்டுகை விநாயகரை வழிபட்ட அவர், தொடர்ந்து மூலவர், சண்முகர், சத்ருசம்ஹார மூர்த்தி மற்றும் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
வழிபாட்டிற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்துப் பேசியதாவது: புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி தற்போது வரை பா.ஜ.க. கூட்டணியில் தான் நீடிக்கிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெற்று வருகின்றன.
தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா?" என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் நேரடியாக மறுப்பு தெரிவித்தார். நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
புதுச்சேரியில் எதிர்வரும் மார்ச் 9-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பா.ஜ.க. - என்.ஆர். காங்கிரஸ் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், ரங்கசாமி புதிய கூட்டணிகளைத் தேடுவதாகவும் பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில், அவரது இந்த விளக்கம் அரசியல் வட்டாரத்தில் நிலவி வந்த குழப்பங்களுக்குத் தீர்வாக அமைந்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: பெண் பலி; சிறுமிகள் உட்பட 10 பேர் படுகாயம்!
ஞாயிறு 22, மார்ச் 2026 10:58:10 AM (IST)

மாணவி படுகொலை: கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆறுதல்
ஞாயிறு 22, மார்ச் 2026 10:24:56 AM (IST)

தூத்துக்குடியில் சர்வதேச மகளிர் தின கபடி போட்டி: துறைமுக ஆணையத் தலைவர் பரிசு வழங்கினார்
ஞாயிறு 22, மார்ச் 2026 9:43:42 AM (IST)

ஜாமீனில் வந்த வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை - போலீசார் விசாரணை!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:40:00 AM (IST)

தூத்துக்குடியில் மீன் வரத்து அதிகரிப்பு: விற்பனை அமோகம்; பொதுமக்கள் ஆர்வம்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:36:44 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.33.73 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ஆட்சியர் இளம்பகவத் தகவல்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:02:37 AM (IST)








