» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தாமிரபரணி நதிக்கரை கொலைகளின் கூடாரம் : திமுக அரசு மீது நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு

வெள்ளி 6, மார்ச் 2026 8:57:36 PM (IST)

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் தனது 'எக்ஸ்' (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கொலைக் குற்றங்கள் அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 30 படுகொலைகள் நிகழ்ந்துள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

தமிழர் நாகரிகத்தின் தொட்டிலான தாமிரபரணி நதிக்கரைப் பகுதிகளைக் கொடூர கொலைகளின் கூடாரமாக மாற்றியதுதான் திமுக அரசின் சாதனை என அவர் சாடியுள்ளார். தமிழகத்தில் நிலவும் இத்தகைய சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் வரும் தேர்தலில் எதிரொலிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்: தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கைச் சிதைக்கும் திமுக அரசை, வரும் தேர்தலில் மக்கள் தயவுதாட்சண்யமின்றி நிராகரிப்பார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory