» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தருவைகுளம் பகுதியில் தூண்டில் வளைவு திட்டம்: முதல் அமைச்சருக்கு மீனவர்கள் நன்றி!

வெள்ளி 6, மார்ச் 2026 3:55:58 PM (IST)



தருவைகுளம் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க நிதி தமிழக அரசு ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதற்கு அப்பகுதி மீனவர்கள் நன்றி தெரிவித்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தருவைகுளம் கிராம மீனவர்களின் பல ஆண்டு காலக் கனவான தூண்டில் வளைவு துறைமுகம் அமைக்க தமிழக அரசு ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தச் சிறப்பான திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணனை மீனவர்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியச் செயலாளரும், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான இளையராஜா ஏற்பாட்டில், தருவைகுளம் ஊர் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் மீனவ சங்க நிர்வாகிகள் தூத்துக்குடி கணேஷ் நகரில் உள்ள அமைச்சரின் முகாம் அலுவலகத்திற்குச் சென்றனர். அங்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு ஆளுயர ரோஜாப்பூ மாலை அணிவித்து மீனவர்கள் தங்கள் நெகிழ்ச்சியான நன்றியைத் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் பங்குத்தந்தை வின்சன் அடிகளார், ஊர் கட்டளைக்காரர் மகாராஜன், யோகராஜ், முன்னாள் மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர் லூர்துராஜ் மற்றும் விசைப்படகு, நாட்டுப்படகு சங்க நிர்வாகிகள் பன்னீர் சர்சிஸ், பாலன் புஷப்ராஜ், கண்ணன் ராஜ், மாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும், ஒன்றிய நிர்வாகிகள் அனிட்டன், சுதன்ராஜ், மிக்கேல் பாஸ்கர், பிரஸ்நேவ், வழக்கறிஞர் பிரான்சிஸ் மற்றும் அமைச்சரின் நேர்முக உதவியாளர்கள் கிருபாகரன், கபடிகந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

இது குறித்து கிராம நிர்வாகிகள் கூறுகையில், "எங்கள் கோரிக்கையை ஏற்று ரூ.150 கோடி நிதி ஒதுக்கிய முதலமைச்சர் அவர்களுக்கும், இதற்காகத் தொடர்ந்து பாடுபட்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல், எங்களது கோரிக்கைக்குப் பக்கபலமாக இருந்த திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி அவர்களுக்கும் ஊர் மக்கள் சார்பில் நன்றியை உரித்தாக்குகிறோம்" எனத் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory