» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சாரண, சாரணியர் சிந்தனை நாள் விழா: 15 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
வெள்ளி 6, மார்ச் 2026 5:06:07 PM (IST)

தூத்துக்குடியில் நடைபெற்ற சாரண, சாரணியர் போட்டிகளில் சாரணர் பிரிவில் ஸ்டார் மெட்ரிக் பள்ளியும், சாரணியர் பிரிவில் சுப்பையா வித்யாலயம் பள்ளிகள் முதலிடம் பிடித்தன.
தூத்துக்குடி மாவட்ட பாரத சாரண, சாரணிய இயக்கத்தின் சார்பில் சாரணர் மற்றும் சாரணியர் பிரிவுகளுக்கான சிந்தனை நாள் விழா, மறவன்மடம் பிஷப் கால்டுவெல் கல்லூரியில் மூன்று நாட்கள் நடைபெற்றது.
இதில் குறும்படம் தயாரித்தல், கிராமிய நடனம், ஓவியம், ரங்கோலி, சமையல், கூடாரம் அமைத்தல் உள்ளிட்ட ஒன்பது வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. சாரணர் பிரிவில் ஸ்டார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதலிடத்தையும், பி.எஸ். பெரியநாயகம் மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடத்தையும் பிடித்தன.
சாரணியர் பிரிவில் சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதலிடத்தையும், ஸ்டார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடத்தையும் வென்றன. வெற்றி பெற்றவர்களுக்குத் தொழிலதிபர் விவிலியன், கல்லூரி முதல்வர் ஜெயா ஆகியோர் பரிசுகளை வழங்கினர். தேசியப் பயிற்சியாளர்கள் ஐடா, கிறிஸ்டி ஹேம்லட் விஜி, கார்த்திக், ராஜகோபால், கிருஷ்ணன் ஆகியோர் சிறப்புப் பயிற்சி அளித்தனர்.
இயக்க நிறுவனர் பேடன் பவுல் பிறந்தநாளை முன்னிட்டு ஆசிரமங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதில், 15 பள்ளிகளைச் சேர்ந்த 252 சாரணர்கள், 240 சாரணியர்கள் மற்றும் 30 பொறுப்பாசிரியர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர் எட்வர்ட் ஜான்சன்பால், துணைச் செயலாளர் சகாய மேரி வீனஸ், மாவட்ட ஆணையர் சரவணன் மற்றும் பயிற்சி ஆணையர்கள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தாமிரபரணி நதிக்கரை கொலைகளின் கூடாரம் : திமுக அரசு மீது நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு
வெள்ளி 6, மார்ச் 2026 8:57:36 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்!
வெள்ளி 6, மார்ச் 2026 8:39:00 PM (IST)

இளைஞரைத் தாக்கிய வழக்கில் 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 6, மார்ச் 2026 5:34:10 PM (IST)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கித் தேர்வில் வெற்றி பெற கல்லூரி மாணவர்கள் சிறப்புப் பிரார்த்தனை!
வெள்ளி 6, மார்ச் 2026 4:43:53 PM (IST)

தூத்துக்குடியில் அங்கன்வாடி கட்டிடம் இடிந்து விபத்து; அதிகாரிகளின் அலட்சியம்: பாஜக கண்டனம்
வெள்ளி 6, மார்ச் 2026 4:30:10 PM (IST)

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது : தூத்துக்குடியில் செல்வப்பெருந்தகை பேட்டி
வெள்ளி 6, மார்ச் 2026 4:12:44 PM (IST)









