» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கித் தேர்வில் வெற்றி பெற கல்லூரி மாணவர்கள் சிறப்புப் பிரார்த்தனை!
வெள்ளி 6, மார்ச் 2026 4:43:53 PM (IST)

தமிழ்நாடு மெர்க்கென்டைல் வங்கியின் கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் வெற்றி பெற வேண்டி கோவில்பட்டியில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தமிழ்நாடு மெர்க்கென்டைல் வங்கியின் (TMB) கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வு வரும் 8-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த தேர்வை கோவில்பட்டி எஸ்.எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியைச் சேர்ந்த சுமார் 60 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.
இவர்களுக்காகக் கல்லூரி நிர்வாகம் சார்பில் பிரத்யேகப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, தேர்வுக்குத் தயார் செய்யப்பட்டுள்ளனர். மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற வேண்டி, கோவில்பட்டி அருள்மிகு மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் இன்று காலை சிறப்புப் பூஜை நடைபெற்றது. கோவில் தர்மகர்த்தா மாரியப்பன், கல்லூரிச் செயலாளர் கண்ணன் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
வங்கித் தேர்வு எழுதவுள்ள மாணவர்கள், தங்களது தேர்வு நுழைவுச்சீட்டுகளை அம்மனின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து ஆசி பெற்றனர். இந்தச் சிறப்புப் பூஜையில் கல்லூரி முதல்வர் செல்வராஜ், கோவில் கமிட்டி உறுப்பினர் பாலமுருகன், பேராசிரியர்கள் ராமஜெயா, பிரியங்கா, பிரபாகரன், ரீத்திகா, பாரதி, அலுவலக ஊழியர் கருப்பசாமி மற்றும் திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பூஜையின் நிறைவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தாமிரபரணி நதிக்கரை கொலைகளின் கூடாரம் : திமுக அரசு மீது நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு
வெள்ளி 6, மார்ச் 2026 8:57:36 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்!
வெள்ளி 6, மார்ச் 2026 8:39:00 PM (IST)

இளைஞரைத் தாக்கிய வழக்கில் 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 6, மார்ச் 2026 5:34:10 PM (IST)

தூத்துக்குடியில் சாரண, சாரணியர் சிந்தனை நாள் விழா: 15 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
வெள்ளி 6, மார்ச் 2026 5:06:07 PM (IST)

தூத்துக்குடியில் அங்கன்வாடி கட்டிடம் இடிந்து விபத்து; அதிகாரிகளின் அலட்சியம்: பாஜக கண்டனம்
வெள்ளி 6, மார்ச் 2026 4:30:10 PM (IST)

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது : தூத்துக்குடியில் செல்வப்பெருந்தகை பேட்டி
வெள்ளி 6, மார்ச் 2026 4:12:44 PM (IST)









