» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் எஸ்.டி.கே. ராஜன் அணி அமோக வெற்றி!

செவ்வாய் 17, பிப்ரவரி 2026 10:23:11 AM (IST)


தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல நிர்வாகிகள் தேர்தலில் எஸ்.டி.கே. ராஜன் அணியினர் அமோக வெற்றி பெற்று மீண்டும் திருமண்டல நிர்வாகத்தைப் கைப்பற்றினர்.

தூத்துக்குடி -நாசரேத் திருமண்டலத்தின் இறுதி கட்ட தேர்தல் நாசரேத் பரி. யோவான் பேராலயத்தில் வைத்து நேற்று (16 ந் தேதி) நடைபெற்றது. இத் தேர்தலை தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல நிர்வாகி ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி தலைமையேற்று நடத்தினார்.  

இத்தேர்தலில் எஸ்.டி.கே. ராஜன் அணி சார்பில் போட்டியிட்ட குருவானவர் மோசஸ் ஜெபராஜ் , உபதலைவராகவும்  குருவானவர் டி.ஜி.ஏ. தாமஸ் குருத்துவச் செயலராகவும், எஸ்.டி.கே. அணித் தலைவர் எஸ்.டி.கே. ராஜன் லே செயலராகவும், டி.கே.எம்.ஜான்சன் பொருளாளராகவும் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.  

இதைத் தொடர்ந்து திருமண்டல செயற்குழு பிரதிநிதிகள் மற்றும் சினாடு பேரவை தேர்தல்கள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது. இதிலும் எஸ்.டி.கே. ராஜன் அணியினர் பெரும்பான்மையாக வெற்றி பெற்றனர்.

இத் தேர்தல்கள் அனைத்தையும் தூத்துக்குடி _ நாசரேத் திருமண்டல நிர்வாகி ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி தலைமையில், தேர்தல் அதிகாரிகளான ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் ரெத்தினராஜ் மற்றும் ஜான் ஆர்.டி. சந்தோஷம் ஆகியோர் நடத்தினர். 

இத் தேர்தலையொட்டி நாசரேத் தூய யோவான் பேராலய வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முன்னதாக நாசரேத் பரி. யோவான் பேராலயத்தில் நேற்று (16ம்தேதி) காலை 8 மணிக்கு பரிசுத்த திருவிருந்து ஆராதனை பேராலய தலைமை குருவானவர் ஹென்றி ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory