» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்பாளராக அறிவிப்பு : தூத்துக்குடியில் உற்சாகக் கொண்டாட்டம்!
வியாழன் 5, மார்ச் 2026 3:49:06 PM (IST)
தமிழகத்தில் காலியாகவுள்ள மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில், திமுக சார்பில் மீனவச் சமுதாயத்தைச் சேர்ந்த பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்குத் தூத்துக்குடியில் பரதவர் நலக் கூட்டமைப்பு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை இடங்களில், திமுக கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட 4 இடங்களில், ஒரு இடம் காங்கிரஸ் கட்சிக்கும், மற்றொரு இடம் தேமுதிகவிற்கும் வழங்கப்பட்டது. மீதமுள்ள 2 இடங்களில் திமுக சார்பில் மூத்த உறுப்பினர் திருச்சி சிவா மற்றும் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மீனவச் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்குப் பிரதிநிதித்துவம் வழங்கியதற்காகத் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தூத்துக்குடியில் சிறப்புக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. பரதவர் நலக் கூட்டமைப்பின் தலைவர் ஜேசையா வில்லவராயர் ஆலோசனைப்படி, ஒருங்கிணைப்பாளர் ஹெர்மன் கில்டு தலைமையில் பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பாகத் திரண்ட மீனவ மக்கள், பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பரதகுல மீனவ மக்களுக்கு உரிய அரசியல் அங்கீகாரம் வழங்கியதற்காகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் மற்றும் காங்கிரஸ் கட்சி மாநிலத் துணைத் தலைவர் ஏ.பி.சி.வி. சண்முகம் ஆகியோருக்குப் பரதவர் நலக் கூட்டமைப்பினர் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் குரூஸ் பர்னாந்து நற்பணி மன்றச் செயலாளர் சசிகுமார், பிரண்ட்ஸ் கருடோசா, திட்டோ மர்னாஸ், சேவியர் சில்வா, மானவே யோகேஷ், சேசுராஜா, பிரசாத் வாஸ், ரிகன், ஸ்டேரி மோரைஸ் உள்ளிட்ட ஏராளமான மீனவப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மண், மானம், மொழியைக் காக்க மீண்டும் திமுக ஆட்சி: தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் பிரசாரம்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 7:54:45 PM (IST)

லாரி மீது கார் மோதல்: தம்பதி உட்பட 4 பேர் பலி : குழந்தைகள் படுகாயம்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:43:00 PM (IST)

பனையூரில் 10,000 ஆண்டுகால காலப் பெட்டகம் என திகழும் புதைபடிவங்கள்: தொல்லியல் ஆர்வலர் தகவல்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:12:54 PM (IST)

தூத்துக்குடியில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் – ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 4:26:58 PM (IST)

நாசரேத் மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் மனமகிழ்ச்சி விழா
திங்கள் 13, ஏப்ரல் 2026 4:20:23 PM (IST)

அம்பேத்கர் பிறந்தநாள்: ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் உறுதிமொழி ஏற்பு!
திங்கள் 13, ஏப்ரல் 2026 3:23:13 PM (IST)







