» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டிசிடபிள்யூ நிறுவனத்தில் 55-வது தேசிய பாதுகாப்பு தின விழா

வியாழன் 5, மார்ச் 2026 8:07:30 AM (IST)



தூத்துக்குடி மாவட்டம் சாகுபுரம், டிசிடபிள்யூ நிறுவனத்தில் 55-வது தேசிய பாதுகாப்பு தின விழா நேற்று மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

விழாவின் தொடக்கத்தில், நிறுவனத்தின் மூத்த செயல் உதவித் தலைவர் (பணியகம்)  கோ. ஸ்ரீநிவாசன்  தலைமை தாங்கி பாதுகாப்பு கொடியை ஏற்றி வைத்தார். உற்பத்தித் துறை உதவித் தலைவர்  எஸ். சுரேஷ்  சிறப்புரை ஆற்றினார். நிறைவு விழாவில், தூத்துக்குடி தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரக் கூடுதல் இயக்குநர்  ஆர். சித்தார்த்தன்  சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். 

மூத்த செயல் உதவித்தலைவர்  கோ. ஸ்ரீநிவாசன் தலைமையுரை ஆற்றினார். துணை உதவித் தலைவர் (பவர் பிளாண்ட்)  கே. மீனாட்சி சுந்தரம் சிறப்புரை வழங்கினார். பாதுகாப்புத் துறைத் தலைவர்  சி. ஆல்விஸ் கிப்ட்  2025-ம் ஆண்டிற்கான பாதுகாப்பு ஆண்டு அறிக்கையைச் சமர்ப்பித்தார்.

விழாவில் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள்  ரவிக்குமார்,  கருணாகரன், செல்வி விமலா தேவி, செல்வி லீஸ்மா, மற்றும் செல்வி ரீனா சாருன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், ஸ்பிக் மற்றும் சூப்பர் கேஸ் நிறுவன பிரதிநிதிகள், டிசிடபிள்யூ நிறுவன மேலாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விழாவின் இறுதியில் பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக விழாவில் பங்கேற்ற அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பு இறைவணக்கம் பாடி, பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை டிசிடபிள்யூ நிறுவன பாதுகாப்புத் துறையினர் சிறப்பாகச் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory