» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் 209 சப்-இன்ஸ்பெக்டர்களின் இடமாற்ற உத்தரவு ரத்து!
வியாழன் 5, மார்ச் 2026 8:41:05 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வந்த 209 சப்-இன்ஸ்பெக்டர்களை மாவட்டத்தை விட்டு வெளியே இடமாற்றம் செய்து, நெல்லை சரக டி.ஐ.ஜி முன்னதாக உத்தரவிட்டிருந்தார்.
தமிழக தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாவட்ட அளவிலான அதிகாரிகளாகக் கருதப்படுகின்றனர். இவர்கள் தங்களது சொந்தத் தொகுதியிலோ, அல்லது ஒரே தொகுதியில் 3 ஆண்டுகளுக்கு மேலாகவோ பணியாற்றி இருந்தால், அவர்களை மாவட்டத்திற்குள்ளேயே வேறு தொகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதற்கு முன்னதாக, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 209 சப்-இன்ஸ்பெக்டர்கள் வெளி மாவட்டங்களுக்கும், அதேபோல் வெளி மாவட்டங்களிலிருந்து தூத்துக்குடிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டிருந்தது. இவர்களில் பெரும்பாலானோர் அண்மையில்தான் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.
தற்போது தேர்தல் ஆணையத்தின் புதிய உத்தரவின்படி, வெளி மாவட்டங்களுக்கான இடமாற்ற உத்தரவை ரத்து செய்யுமாறு தென்மண்டல ஐ.ஜி, அனைத்துக் காவல் ஆணையர்கள் மற்றும் டி.ஐ.ஜி-க்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக, வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் தொடர்ந்து அதே இடத்திலேயே பணியாற்றி வருவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மண், மானம், மொழியைக் காக்க மீண்டும் திமுக ஆட்சி: தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் பிரசாரம்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 7:54:45 PM (IST)

லாரி மீது கார் மோதல்: தம்பதி உட்பட 4 பேர் பலி : குழந்தைகள் படுகாயம்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:43:00 PM (IST)

பனையூரில் 10,000 ஆண்டுகால காலப் பெட்டகம் என திகழும் புதைபடிவங்கள்: தொல்லியல் ஆர்வலர் தகவல்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:12:54 PM (IST)

தூத்துக்குடியில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் – ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 4:26:58 PM (IST)

நாசரேத் மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் மனமகிழ்ச்சி விழா
திங்கள் 13, ஏப்ரல் 2026 4:20:23 PM (IST)

அம்பேத்கர் பிறந்தநாள்: ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் உறுதிமொழி ஏற்பு!
திங்கள் 13, ஏப்ரல் 2026 3:23:13 PM (IST)








RajaMar 7, 2026 - 01:09:15 PM | Posted IP 172.7*****