» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
100% வாக்குப்பதிவை வலியுறுத்தி வ.உ.சிதம்பரம் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வுப் பேரணி
புதன் 4, மார்ச் 2026 5:27:54 PM (IST)

சட்டமன்றத் தேர்தலில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
தமிழகச் சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வாக்காளர் விழிப்புணர்வுப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி அருகே உள்ள அய்யனடைப்பு கிராமத்தில் வ.உ.சிதம்பரம் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட (NSS) மாணவர்கள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
வ.உ.சிதம்பரம் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் (அலகு 70) அய்யனடைப்பு கிராமத்தில் பத்து நாட்கள் நடைபெற்று வருகிறது. இந்த முகாமின் முக்கிய நிகழ்வாக, திட்ட அலுவலர் செல்வம் தலைமையில் மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணியை மேற்கொண்டனர்.
ஜனநாயகக் கடமையான வாக்களிப்பை 100% உறுதி செய்தல், வாக்களிக்கப் பணம் வாங்குவதைத் தவிர்த்தல், தங்களது வாக்குகளைப் பதிவு செய்வதுடன், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் ஏந்தியவாறு, வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் 209 சப்-இன்ஸ்பெக்டர்களின் இடமாற்ற உத்தரவு ரத்து!
வியாழன் 5, மார்ச் 2026 8:41:05 AM (IST)

டிசிடபிள்யூ நிறுவனத்தில் 55-வது தேசிய பாதுகாப்பு தின விழா
வியாழன் 5, மார்ச் 2026 8:07:30 AM (IST)

திருச்செந்தூர் அவதார பதியில் அய்யா வைகுண்டரின் 194-வது அவதார தின விழா கோலாகலம்!
வியாழன் 5, மார்ச் 2026 8:00:43 AM (IST)

காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்: எஸ்பி மதன் நேரடி விசாரணை
புதன் 4, மார்ச் 2026 8:14:22 PM (IST)

தூத்துக்குடி வருகை தரும் துணை முதலமைச்சருக்கு கருப்புக் கொடி காட்ட விவசாயிகள் முடிவு?
புதன் 4, மார்ச் 2026 8:08:03 PM (IST)

அரசினர் குழந்தைகள் இல்லத்தில் புதிய கட்டடம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
புதன் 4, மார்ச் 2026 5:00:24 PM (IST)









