» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்: எஸ்பி மதன் நேரடி விசாரணை
புதன் 4, மார்ச் 2026 8:14:22 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து விரைந்து தீர்வு காணும் வகையில், ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் மாவட்ட காவல் அலுவலகத்தில் இந்தக் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, இன்று நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த 32 மனுதாரர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை நேரடியாகச் சந்தித்துத் தங்கள் புகார்களைத் தெரிவித்தனர். நிலத் தகராறு, குடும்பப் பிரச்சினைகள் மற்றும் பிற குற்றச் சம்பவங்கள் தொடர்பான மனுக்கள் எஸ்பி அவர்களிடம் வழங்கப்பட்டன.
பொதுமக்களின் புகார்களைப் கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன், அந்த மனுக்கள் மீது உடனடியாக உரிய விசாரணை மேற்கொண்டு, சட்டத்திற்குட்பட்ட விரைவான நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மண், மானம், மொழியைக் காக்க மீண்டும் திமுக ஆட்சி: தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் பிரசாரம்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 7:54:45 PM (IST)

லாரி மீது கார் மோதல்: தம்பதி உட்பட 4 பேர் பலி : குழந்தைகள் படுகாயம்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:43:00 PM (IST)

பனையூரில் 10,000 ஆண்டுகால காலப் பெட்டகம் என திகழும் புதைபடிவங்கள்: தொல்லியல் ஆர்வலர் தகவல்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:12:54 PM (IST)

தூத்துக்குடியில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் – ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
திங்கள் 13, ஏப்ரல் 2026 4:26:58 PM (IST)

நாசரேத் மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் மனமகிழ்ச்சி விழா
திங்கள் 13, ஏப்ரல் 2026 4:20:23 PM (IST)

அம்பேத்கர் பிறந்தநாள்: ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் உறுதிமொழி ஏற்பு!
திங்கள் 13, ஏப்ரல் 2026 3:23:13 PM (IST)







