» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் நாளை மின்தடை அறிவிப்பு - எந்தெந்த பகுதிகள்?

திங்கள் 16, பிப்ரவரி 2026 5:10:06 PM (IST)

தூத்துக்குடியில் நாளை (பிப்-17) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மின் பகிர்மான வட்டத்தில் உள்ள கொம்புகாரநத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நாளை பிப்ரவரி 17, 2026 (செவ்வாய்க்கிழமை) அன்று நகரின் பல்வேறு பகுதிகளில் காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று செயற்பொறியாளர் (விநியோகம்) தெரிவித்துள்ளார்.

இந்த பராமரிப்பு பணி காரணமாக வடக்கு காரச்சேரி, காசிலிங்கபுரம், சிங்கத்தாகுறிச்சி, ஆலந்தா, சவலாப்பேரி, செக்காரக்குடி, மகிழம்புரம், K.தளவாய்புரம், ராமசாமிபுரம் புதூர், கொம்புகாரநத்தம், செட்டியூரணி, கள்ளன்பரப்பு, சொக்கலிங்கபுரம், உமரிக்கோட்டை, வடக்குசிலுக்கன்பட்டி, மேலத்தட்டப்பாறை, கீழத்தட்டப்பாறை, சமத்துவபுரம், மீனாட்சிபுரம், கேம்ப் தட்டப்பாறை, வரதராஜபுரம், S.கைலாசபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory