» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 47 ஆண்டுகால ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு : மேயர் அதிரடி ஆய்வு!
திங்கள் 16, பிப்ரவரி 2026 10:43:57 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சிக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மீட்டெடுக்க, மேயர் ஜெகன் பெரியசாமி சுவர் ஏறிக் குதித்து ஆய்வு நடத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் அருகே, மாநகராட்சிக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக மேயருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தபோது, கடந்த 47 ஆண்டுகளாக மூன்று தனிநபர்கள் அந்த இடத்தை ஆக்கிரமித்து வைத்திருந்தது தெரியவந்தது. ஆக்கிரமிப்பாளர்களில் ஒருவர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், மாநகராட்சி ஆவணங்களைச் சரிபார்த்து அந்த இடம் அரசுக்குச் சொந்தமானது என்பதை மேயர் உறுதி செய்தார். ஆக்கிரமிப்புகளை முழுமையாகக் கண்டறிய அவர் சுவர் ஏறிக் குதித்துச் சென்று பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்பட்டு, அங்கு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்தச் சாலை எட்டயபுரம் சாலை முதல் மீனாட்சிபுரம் வழியாக ஜெயராஜ் சாலை வரை அமையவுள்ளது. மேலும், 3-வது கேட் மேம்பாலத்தின் கீழ் உள்ள பழைய கட்டிட ஆக்கிரமிப்பும் அகற்றப்பட்டு, அங்கு சாலை அமைக்கப்பட உள்ளது.இச்சாலைகள் பயன்பாட்டிற்கு வரும்போது, பொதுமக்கள் மீனாட்சிபுரம் வழியாகப் பழைய பேருந்து நிலையத்தை மிக எளிதாக அடைய முடியும் என்று மேயர் தெரிவித்தார்.
ஆய்வின் போது திமுக வட்டச் செயலாளர்கள் ரவீந்திரன், கதிரேசன், மின்வாரிய தொழிற்சங்கத் தலைவர் பேச்சிமுத்து, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
ரெங்கசாமி 3 வார்டு உறுப்பினர்Feb 19, 2026 - 05:41:36 PM | Posted IP 104.2*****
எட்டையபுரம் ரோட்டில் சுசி பெட்ரோல் பங்க் பின்புறமுள்ள 40 அடி அகல rodo தெற்கே முதியோர் இல்லத்தில் இருந்து வடக்கே ஹவுசிங் போர்டு வரை அப்ரூவல் பிளாட்டில் உள்ள ரோட்டை தனியார்கள் அடைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்
KuthalingamFeb 19, 2026 - 05:29:33 PM | Posted IP 162.1*****
தனசேகரன் நகர் லெட்சுமிமஹால் எதிரில் பாதாளச்சாக்கடை பைப் மற்றும் குடிநீர் பைப் இரண்டையும் மாநகராட்சி பணியாளர்களால் பராமரிப்பு பணியின் போது ஜேசிபி மூலம் தாண்டும்போது உடைத்து விட்டார்கள் பின்னர் அதை சரி செய்யாமல் அப்படியே மூடிவிட்டு சென்றுவிட்டார்கள் சுமார் ஒரு மாதம் ஆகிறது. இன்று வரை சாக்கடை மற்றும் குடிநீர் சேர்ந்து மெயின் ரோட்டில் தினமும் தண்ணீர் திறக்கும் போது இரண்டும் கலந்து ரோட்டில் வெள்ளமாக சென்று கொண்டு இருக்கிறது, மாநகராட்சி கண்டு கொள்வதே இல்லை சரி செய்யப்படுமா
haiFeb 16, 2026 - 10:27:07 PM | Posted IP 104.2*****
அந்த தனியார் ஹோட்டல் பெயர் என்ன?
என்னதுFeb 16, 2026 - 12:45:49 PM | Posted IP 104.2*****
கண்டுபிடிக்க 47 வருசமா ?
தமிழ்ச்செல்வன்Feb 16, 2026 - 12:32:30 PM | Posted IP 172.7*****
அருமை...
இதுபோல் ஏராளமான சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது...
அனைத்தையும் மீட்க வேண்டும்.
எந்தெந்த இடங்கள் என்று சொன்னால் செய்வீர்களா?
மேலும் தொடரும் செய்திகள்

விமான முன்பதிவு ஆளுமை மற்றும் கேபின் குழு பணியாளர் பயிற்சி: ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 5:26:55 PM (IST)

தாமிரபரணி அருகிலிருந்தும் குடிநீருக்குத் தவிப்பு: வசவப்பபுரம் கிராம மக்கள் திண்டாட்டம்!
வியாழன் 5, மார்ச் 2026 4:48:17 PM (IST)

பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்பாளராக அறிவிப்பு : தூத்துக்குடியில் உற்சாகக் கொண்டாட்டம்!
வியாழன் 5, மார்ச் 2026 3:49:06 PM (IST)

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: ஆட்சியர் நேரில் ஆய்வு!
வியாழன் 5, மார்ச் 2026 12:52:23 PM (IST)

தூத்துக்குடியில் வருவாய்த்துறையினர் சாலை மறியல் போராட்டம்: 97 பேர் கைது!
வியாழன் 5, மார்ச் 2026 12:44:13 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 209 சப்-இன்ஸ்பெக்டர்களின் இடமாற்ற உத்தரவு ரத்து!
வியாழன் 5, மார்ச் 2026 8:41:05 AM (IST)










Esakki RajaFeb 19, 2026 - 11:26:36 PM | Posted IP 172.7*****