» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 10 செ.மீ மழை பெய்தாலும் தண்ணீர் வடிந்துவிடும் : மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!
புதன் 4, பிப்ரவரி 2026 5:09:19 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதால், இனி 10 செ.மீ மழை பெய்தாலும் அடுத்த 2 மணி நேரத்திற்குள் தண்ணீர் வடியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது துணை ஆணையா் சரவணக்குமாா், மண்டலத்தலைவர் நிர்மல்ராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் மேயர் பேசியதாவது: தூத்துக்குடி மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், சீரான பயணத்தை உறுதி செய்யவும் பல்வேறு சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
ஏபிசி கல்லூரி அருகில் உள்ள 5.5 அடி சாலை, 12 மீட்டர் அகலச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. ஸ்டேட் பேங்க் காலனி வழியாக 60 அடி சாலையில் கடற்கரை வரை செல்லும் வகையில் இணைப்புச் சாலைகள் உருவாக்கப்படுகின்றன. வின்பாஸ்ட் சந்திப்பில் இருந்து சங்கரபேரி லிங்க் ரோடு வழியாக புதிய பேருந்து நிலையத்திற்குச் செல்ல புதிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ரயில்வே பாலத்தின் கீழே இருந்த ஆக்கிரமிப்புகள் மற்றும் முட்செடிகள் அகற்றப்பட்டு, கார்கள் செல்லும் வகையில் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இது போக்குவரத்து நெரிசலை பெருமளவு குறைக்கும். வடக்கு மண்டலத்தில் உள்ள 'பிங்க் பார்க்'வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இளைஞர்களுக்காக உடற்பயிற்சி கூடங்களுடன் கூடிய சிறிய பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன.
ரஹமத் நகரில் புதியதாக ஸ்கேட்டிங் (Skating) மைதானம் அமைக்கப்பட உள்ளது.தூத்துக்குடி மாநகராட்சியில் கேரி பேக் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என மேயர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதால், இனி 10 செ.மீ மழை பெய்தாலும் அடுத்த 2 மணி நேரத்திற்குள் தண்ணீர் வடியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தூய்மையான நகரத்தை உருவாக்க பொதுமக்கள் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.
கூட்டத்தில் உதவி ஆணையா் பொறுப்பு முனீர்அகமது, நகரமைப்புதிட்ட உதவி செயற்பொறியளர் ராஜேஷ்கண்ணா, நகர்நல அலுவலர் சரோஜா, இளநிலை பொறியாளா் அமல்ராஜ், சுகாதார ஆய்வாளர்கள் ராஜசேகா், கண்ணன், மாநகராட்சி கணக்கு குழு தலைவர் ரெங்கசாமி, கவுன்சிலர்கள் காந்திமதி, சுப்புலட்சுமி, நாகேஸ்வாி, அந்தோணி பிரகாஷ் மாா்ஷலின், ஜெயசீலி, பவாணி, ஜெபஸ்டின் சுதா, தெய்வேந்திரன், கற்பகக்கனி, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா், ஜேஸ்பா், மாநகர் மாவட்ட காங்கிரஸ் மண்டலத்தலைவர் சேகா், மேயாின் நோ்முக உதவியாளர் ரமேஷ், உள்பட பொதுமக்கள் அலுவலா்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
சனி 18, ஜூலை 2026 8:32:32 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் : 20 வழக்குகளுக்கு தீர்வு: ரூ.75.25 லட்சம் வசூல்!
சனி 18, ஜூலை 2026 5:17:07 PM (IST)

தொல்காப்பியத்தைத் தொடர்ச்சியாக எழுதி உலக சாதனை முயற்சி: அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டுகள்!
சனி 18, ஜூலை 2026 4:53:16 PM (IST)

தூத்துக்குடியில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் வழக்கு: போலீசாருக்கு டிஐஜி திருநாவுக்கரசு பாராட்டு
சனி 18, ஜூலை 2026 3:53:20 PM (IST)

ஜீவன் ரக்ஷா பதக் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - ஆட்சியர் விஷு மகாஜன் அழைப்பு!
சனி 18, ஜூலை 2026 3:46:17 PM (IST)

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ஆதார் சேவை மையம் : பொதுமக்கள் பயன்பெற அஞ்சல்துறை அழைப்பு!
சனி 18, ஜூலை 2026 3:30:02 PM (IST)








