» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மினிபஸ் டிரைவர்களிடையே மோதல்: ஒருவர் கைது

புதன் 4, பிப்ரவரி 2026 1:03:38 PM (IST)

கோவில்பட்டியில் பயணிகளை ஏற்றுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், மினிபஸ்சை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்த மற்றொரு மினிபஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மந்தித்தோப்பு கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் ராஜா (29). கூசாலிப்பட்டி மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் மதிகுமார் (28). இவர்கள் இருவரும் மினிபஸ் டிரைவர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்களிடையே பயணிகளை ஏற்றுவது தொடர்பாக நீண்ட நாட்களாகப் போட்டி மற்றும் முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தன்று கார்த்திக் ராஜா கூசாலிப்பட்டி பகுதியில் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த மதிகுமார் அவரைத் தடுத்துத் தகராறு செய்துள்ளார். தொடர்ந்து கார்த்திக் ராஜா சிற்றுந்தை ஓட்டிச் சென்றபோது, கடலையூர் சாலையில் மதிகுமார் தனது வாகனத்தால் கார்த்திக் ராஜாவின் சிற்றுந்தை முந்திச் சென்று மோதியுள்ளார். இதில் சிற்றுந்தின் முன்பக்கக் கண்ணாடி மற்றும் டிரைவர் இருக்கை சேதமடைந்தது. 

மேலும், கார்த்திக் ராஜாவை அவதூறாகப் பேசிய மதிகுமார், சிற்றுந்தைத் தீ வைத்து கொளுத்தி விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட கார்த்திக் ராஜா அளித்த புகாரின் பேரில், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, தலைமறைவாக இருந்த மதிகுமாரைத் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory