» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மூன்று முறை தற்கொலைக்கு முயன்றவர் மீண்டும் தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்!
வெள்ளி 16, ஜனவரி 2026 11:11:50 AM (IST)
தூத்துக்குடியில் 3முறை தற்கொலைக்கு முயன்ற மீனவர் 4வது முறையாக மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி புதிய துறைமுகம் சுனாமி காலனியில் வசிப்பவர் முத்துச்சாமி இவரது மகன் மாரி செல்வம் (41). மீனவர் ஆன இவருக்கு திருமணம் ஆகி உமையம்மாள் என்ற மனைவி இருக்கிறார். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட குடும்பத் தகராறில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு உமையம்மாள் கணவரை விட்டு பிரிந்து சென்று விட்டாராம். அதிலிருந்து மனவேதனையில் இருந்த மாரி செல்வம் 3 முறை தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார். அப்போது அவரை குடும்பத்தினர்கள் காப்பாற்றியுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற மாரி செல்வம் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர்கள் எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் சுனாமி காலனி புதிய துறைமுகம் ரோட்டில் உள்ள ஒரு மரத்தில் மாரி செல்வம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்த தெர்மல் நகர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் அய்யம் பிள்ளை சம்பவ இடத்துக்கு சென்று இவரது பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொது அமைதிக்கு பங்கம்: ஒரே நாளில் 5பேர் கைது!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 9:08:45 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள்: போலீசார் தீவிர கண்காணிப்பு!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:39:40 PM (IST)

திருச்செந்தூர் கோவில் மாசித் திருவிழா: பிப்.21-ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:20:06 PM (IST)

மெட்டில்பட்டி அரசுப் பள்ளியில் வானவியல் பயிற்சி : மாணவர்கள் ஆர்வம்
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 4:47:38 PM (IST)

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 3:57:55 PM (IST)

தூத்துக்குடி அருகே விஏஓ வீட்டில் ரூ.12லட்சம் நகை கொள்ளை: போலீசார் விசாரணை
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 3:31:41 PM (IST)










